நம்நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று (ஜன.29) விண்ணில் செலுத்தப்படுகிறது .
அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல்...
வட இந்தியாவில் இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.
“புனித நீராடும் சங்கம் காட் பகுதிக்கு அருகே இருந்த தடுப்பு கட்டை உடைந்ததை அடுத்து பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிசிச்சைக்காக மருத்துவமனைக்கு...
என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள்...
வட இந்தியாவில் இன்று (ஜன.28) மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து...
ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு
admin - 0
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியார் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பழங்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்நாட்டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறியவர்கள். இந்த பழங்குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு.
தற்போதைய மன்னன் பழங்குடியின மக்களின் ராஜாவாக...
கடனை திருப்பிச் செலுத்தாத பெண்ணை தாக்கி, மொட்டை அடித்த சுய உதவிக் குழு பெண்கள் மீது திரிபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தின் செபஹிஜலா மாவட்டத்தில் உள்ள பிசால்கர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்காக சுயஉதவிக் குழுவில் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில் அந்த பெண் வீட்டுக்கு சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 15 முதல் 20 பெண்கள் சமீபத்தில்...
தேர்தல் ஆணையம், சட்டத்துக்கு யாரும் பயப்படுவதில்லை, டெல்லியில் பணம், மது, தங்கச் சங்கிலிகளை வாக்காளர்களுக்கு பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பரிசாக வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் கண்முன்னே பழங்குடியின சிறுமியை குழுவாக சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பஹாடி கோர்வா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021-ம் ஆண்டு வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்தது. மேலும், அந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த தந்தை உள்ளிட்ட இருவரை கற்களால் அடித்து அந்த கும்பல்...
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை அடித்து கொன்ற வழக்கில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக...
வக்பு வாரிய ஜேபிசி கூட்டத்தில் 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட்: காரணம் என்ன?
admin - 0
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) கூட்டத்தில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வக்பு வாரிய சட்டத்திருத்த மாசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில்...










