கேரளாவில் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆனநிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தி்ல் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா. இவருக்கும், ஆண் செவிலியரான பிரபின் என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கடந்த 2023 மே மாதம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பிரபின் விஷ்ணுஜாவை திருமணமானதில் இருந்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் துன்பப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணுஜா கடந்த வாரம்...
இறந்த தந்தையின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தந்தையின் உடலில் பாதியை கோரிய வினோத சம்பவம் ம.பி.யில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் ஊருக்கு வெளியில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று...
மணிப்பூரில் குகி பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் போதை செடிகளை அழிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மணிப்பூரில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகும். அந்த மாநிலத்தில் குகி பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளிலும் மைதேயி சமுதாய மக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
மணிப்பூர் மலைப்பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் 'ஓபியம் பாப்பி' என்ற செடிகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செடிகளில் இருந்து ஹெராயின்...
டெல்லி சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை காலை முதல் மாலை வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை 5-ம் தேதி தேர்தல்நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தேர்தலுக்குப்...
சீனா இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
admin - 0
சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம் என்ற பெயரிலான மேக் இன்...
குடியரசுத் தலைவரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறி பாஜக எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவரின் உரை குறித்து சோனியா காந்தியிடம்...
மகா கும்பமேளாவில் கோயா பாயா பிரிவு சாதனை: காணாமல் போன 13,000 பேரை மீட்டு குடும்பத்தாருடன் சேர்ப்பு
admin - 0
பொதுமக்கள் திரளாகக் கூடும் இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போவதும், பிறகு சேர்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. பல கோடி பேர் கூடும் மகா கும்பமேளாவில் இது அதிகமாகவே நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களையும் சேர்த்து உ.பி....
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்
admin - 0
மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக, செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ரூ.1 லட்சத்து 16 கோடியே 514 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்னல், தொலைதொடர்பு துறை, தண்டவாளம் மேம்பாடு உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், தமிழகத்தில் நடக்கும்...
நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் இறங்குகிறாரா? – தொடர்ந்து வற்புறுத்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்
admin - 0
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் பிஹாரில் 9-வது முறையாக முதல்வராக உள்ளார். பாஜக தலைமையிலான என்டிஏ அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணி என அவருக்கு மாறி, மாறி ஆதரவு கிடைக்கிறது. தற்போது என்டிஏ சார்பில் அவர் முதல்வராக இருக்கிறார்.
நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார், மெர்சாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரில்...
கர்நாடகாவில் போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர் நேற்று முன் தினம் காலையில் சூரியநாராயணபுராவில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தியது. கடத்தல்காரர்கள் சுனில் குப்தாவின் சகோதரரும் பெல்லாரி மதுபான விற்பனையாளர் சங்கத்தின் தலைவருமான வேணுகோபால் குப்தாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டனர்.
அப்போது,...










