வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்​கப்​படும். வரும் 2040-ம் ஆண்​டில் நில​வுக்கு இந்திய வீரர்​கள் செல்​வார்​கள் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று சர்வதேச விண்​வெளி உச்சி மாநாடு தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக உரையாற்​றி​னார். அவர் பேசி​ய​தாவது: உலகம் ஒரு குடும்​பம் என்ற உயரிய கொள்கையை இந்​தியா பின்​பற்​றுகிறது. உலகத்​தின் நன்மைக்காக விண்​வெளி...
தெற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதனில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்​டிடம் இடிந்து விழுந்​த​தில், மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் காயமடைந்​தனர். இந்த விபத்​தின்​போது, டெல்லி பல்​கலைக்​கழகத்​தில், 2-ம் ஆண்டு பி.​காம் படித்து வரும் நிதேஷ் சிப் மற்​றும் அவரது நண்​பர் ஆகிய இரு மாணவர்கள் இடி​பாடு​களுக்​குள் சிக்​கிக் கொண்​டனர். உடனடி​யாக, நிதேஷ்...
ஆந்திராவில் வீட்​டின் பூட்டை உடைத்து 46 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளி பொருட்​களை திருடர்​கள் திருடி சென்​றனர். ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், எட்​ல​பாடு எனும் ஊரில் வசிப்​பவர் பார்​வ​தி. இவர், கடந்த சில நாட்​களுக்கு முன்னர், தனது குடும்​பத்​தா​ருடன் ஹைத​ரா​பாத்​தில் உள்ள தனது உறவினரின் வீட்​டிற்கு சென்​றுள்​ளார். பின்​னர், நேற்று காலை அனை​வரும் சொந்த ஊர் திரும்​பினர். அப்​போது, வீட்​டின் பூட்டை உடைத்து யாரோ வீட்​டில்...
டெல்​லி​யில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்கேற்​பதை அந்​நாட்டு அரசு உறுதி செய்​துள்​ளது. பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்னாப்​பிரிக்​கா, எகிப்​து, சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், ஈரான், இந்​தோ​னேசி​யா, எத்​தி​யோப்​பியா ஆகிய நாடுகள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்று உள்​ளது. இதன்​படி செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் டெல்​லி​யில்...
அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார். அதை விமர்சிக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் டல்​லாஸ் நகரில் கடந்த புதன்கிழமை அன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் மாநாட்​டில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பேசுகை​யில், “வரும் நவம்​பர் மாதம் நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலில் ஆளும் குடியரசுக்...
நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது தொடர்பான ஆலோசனை விரைவுபடுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அரசாங்கம் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும் என்றும் முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறு​வன​ம் ஒன்று, முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்​குச் சொந்தமான நிறுவனத்​துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடாக பணப் பரிவர்த்​தனை செய்​தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்​ துறை, இவ்வழக்கில் பினராயி...
பிஆர்எஸ் தலை​வர் சந்​திரசேகர ராவுக்கு கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்​தி, தெலங்கானா சட்டப்பேரவை​​யில் தொடர்ந்து 3-வது நாளாக பிரதான எதிர்க்​கட்​சி​யான பிஆர்எஸ் கட்​சி​யினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்​டப்​பேரவை விவ​காரத்​துறை அமைச்​சர் ஸ்ரீதர் பாபுவின் பரிந்​துரை​யின் பேரில், பேர​வைத் தலை​வர் பிர​சாத் குமார் பிஆர்​எஸ் கட்​சி​யின் செயல் தலை​வர் கே.டி. ராமா​ராவ் உள்​ளிட்ட 22 பிஆர்​எஸ் எம்​எல்​ஏக்​களை​யும் இந்த மழைக்​கால கூட்​டத்​தொடர் முழு​வதும் சஸ்​பெண்ட் செய்து உத்​தர​விட்​டார்​.
தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் ரூ.10,021 கோடி மதிப்​பில் 5 பல்​வழிப்​பாதை ரயில்வே திட்​டங்​களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்​புதல் வழங்கி உள்​ளது. பிரதமர் மோடி தலை​மை​யில், பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சர​வைக் குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், தமிழ்​நாடு, ஆந்​தி​ரா, கர்​நாடகா மற்​றும் தெலங்​கானா ஆகிய மாநிலங்​களுக்​குட்​பட்ட 17 மாவட்​டங்​களில் ரூ.10,021 கோடி முதலீட்​டில், 5 பல்​வழிப்​பாதை ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இது இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய...
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விளம்பரங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக, மெட்டா இந்தியப் பிரிவின் மேலாண் இயக்குநர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. வருகின்ற 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் அவர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பிபிசி ஐ நடத்திய புலனாய்வு விசாரணையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சார்ந்த...