Google search engine
இறந்துபோன தந்தையின் அரசுப் பணியை பெறுவதற்காக உடன்பிறந்த 2 சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. மாநில வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும் அரசுப் பணியை பெறுவதற்கு அவரது 2 மகன்கள் கோபி,...
டெல்​லி​யின் ஆம் ஆத்மி முதல்​வரான அதிஷி மர்லேனா தனது கால்​காஜி தொகு​தி​யில் மீண்​டும் களம் இறங்​கு​கிறார். இங்கு பழம்​பெரும் காளி​காம்​பாள் கோயில் அமைந்​துள்ளது. டெல்​லி​யில் கடந்த 2020 சட்டப்​ பேரவை தேர்​தலில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி, கால்​காஜி தொகு​தி​யில் முதல் முறை யாக போட்​டி​யிட்டு பாஜக வேட்​பாளர் தரம்​பீர் சிங்கை தோல்​வி​யுறச் செய்​தார். அப்போது அவர் 11,422 வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இந்நிலையில், கால்​காஜி தொகு​தி​யில்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார். மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய...
கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2025 டிசம்பருக்குள் பணிகளை முடித்து உற்பத்தி தொடங்கும். 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானை சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. 2025 டிசம்பருக்குள் பணிகளை முடித்து, உற்பத்தி தொடங்க...
இலங்கையில் நெருக்கடி நிலையின்போது 5 பில்லியன் டாலர் பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ள திசநாயகவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இதையடுத்து அவர்களது சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திசநாயக கூறியுள்ளதாவது: இரண்டு...
எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதத்தை ஒப்படையுங்கள் என ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம் எழுதி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தோம். அதில், இந்த அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 51 அட்டைப்...
சத்தீஸ்கர் மாநில காவல்​துறை​யின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்​பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்​தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்டன. நக்சல்​களுக்கு எதிரான காவல்​துறை​யின் நடவடிக்கை, மாநிலத்​தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்​கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்​கப்​பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்​புருக்​குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு...
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல சம்பந்தப்பட்ட நாட்டின் விசா பெற வேண்டும். இந்நிலையில், பிரதமர் மோடி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தற்போது 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....
தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு வரலாற்றாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் கடந்த சனிக்கிழமை உலக இந்துக்கள் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோல், மிகவும் உயரிய வகை துணிகளை நெய்ந்தவர்களின்...
யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் விளங்குகிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை இந்தூர் பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக யாசகர்கள் இல்லாத நகரம் என்ற இலக்கை எட்ட இந்தூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகிஷ் சிங் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 2025-ம் ஆண்டு...