Google search engine
ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3 கோடியை வழங்க கணவர் ஒப்புக் கொண்டார். ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 70 வயதைக் கடந்த இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு...
திருச்சூர் பூரம் திருவிழாவில் யானை அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின்போது ஏராளமான யானைகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இந்த யானைகள் அணிவகுப்புக்கு கட்டுப்பாடு விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யானைகள் அணிவகுப்பு எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உயர்...
நாட்டில் சாக்கடை மாற்றும் செப்டிக் டேங்க் எனப்படும் கழிவு நீர் (எஸ்எஸ்டபிள்யு) அகற்றும் பணியாளர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்: இயந்திரமயமாக்கப்பட்ட "துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை" (நமஸ்தே) திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்பட்ட தரவுகளின்படி சாக்கடை மற்றும் கழிவுநீர்...
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அம்மசூதியில் களஆய்வு நடத்தப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் பகுதியில் 46...
குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மாளிகைக்கு நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வந்தடைந்தார். அவரை தெலங்கானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் மாவட்டம், பொல்லாரத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஓய்வெடுப்பது குடியரசுத் தலைவர்களுக்கு வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். முன்னதாக அவர்...
தமிழ்ப் புத்​தகத் திரு​விழா தலைவர் வணங்​கா​முடி நேற்று பெங்​களூரு​வில் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகத் தமிழ்ப் பத்திரி​கை​யாளர் சங்கத்​தின் சார்பாக கடந்த 2 ஆண்டு​களாக பெங்​களூரு​வில் தமிழ்ப் புத்​தகத் திரு​விழா நடத்​தப்​பட்​டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்​தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்​தகத் திரு​விழாவுக்கு ஏற்பாடு செய்​யப்​பட்டுள் ​ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிவாஜி நகர் அருகிலுள்ள‌ இன்ஸ்​டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்​தில்...
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பரிந்துரை செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்...
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம், மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது மிகச் பொருத்தமான இடம் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றதால் வங்கதேசம் உருவானது. இதை வெற்றி தினமாக ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ம்...
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான...
 ம​காராஷ்டிர தேர்​தலில் காங்​கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி தோல்வி அடைந்​தது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்​திரங்​களில் (இவிஎம்) முறை​கேடு நடந்​துள்ளதாக தெரி​வித்​தது. ஆனால் எதிர்க்​கட்​சிகளின் இண்டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்றுள்ள தேசிய மாநாடு கட்சி​ தலைவரும் காஷ்மீர் முதல்​வருமான உமர் அப்துல்லா இவிஎம் இயந்திரங்​களுக்கு ஆதரவாக கருத்து தெரி​வி்​தார். இந்நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் பொதுச் செயலா​ள​ரும் எம்.பி.​யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறும்​போது, “இவிஎம்​மில் முறை​கேடு...