பிஹாரில் முதல்வர் நிதிஷ் தலை மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. நிதிஷுக்கு பிஹார் முஸ்லிம் கள் கணிசமான எண்ணிக்கை யில் ஆதரவளித்தனர். ஆனால், வக்பு சட்டத் திருத்த மசோ தாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக் கிய ஜனதா தளம் கட்சி ஆதர வளித்ததால், தற்போது முஸ்லிம் கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இப்தார் விருந் தில் பங்கேற்க முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார். அதை புறக்கணித்து அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உட்பட பல்வேறு முஸ் லிம் அமைப்புகள் முதல்வர் நிதிஷுக்கு கடிதம் அனுப்பின.
முதல்வர் நிதிஷுக்கு முஸ்லிம் அமைப்புகள் எழுதிய கடிதத் தில், “உங்கள் கட்சி நாடாளுமன் றத்தில் வக்பு சட்டத்திருத்த மசோ தாவை ஆதரித்தது. எனவே, உங் கள் இப்தார் விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்திய அரசியலமைப்பை மீறும் வக்பு சட்டத் திருத்தம், முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை மேலும் மோசமாக் கும். மதச்சார்பற்ற ஆட்சியையும் சிறுபான்மையினரின் உரிமை களையும் பாதுகாப்பதாக நீங்கள் உறுதி அளித்தீர்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வக்பு சட்டத்தை ஆதரிப்பது, நீங் கள் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டுள் ளனர்.
இந்நிலையில், என்டிஏவின் மற்றொரு உறுப்பினர் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் தனது கட்சி அலுவலகத்தில் நேற்று இப்தார் விருந்து அளித்தார். இதையும் பிஹார் முஸ்லிம்கள் புறக்கணித் தனர். ஆனால், பிஹாரின் முக் கிய எதிர்க்கட்சியும் மெகா கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் கட் சியுமான லாலு பிரசாத்தின் ஆர் ஜேடி சார்பில் நேற்று அக்கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித் திக்கி வீட்டில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் முஸ்லிம் கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது என்டிஏ-வுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கிடையில் வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாளை நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய தனி சட்ட வாரியம் நடத்தவுள்ளது.