Google search engine
மத்திய பிரதேசத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை​யில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்​றது. இந்த தேர்​தலில் மத்திய பிரதேசத்​தின் நீமச் மாவட்​டம், தாடா பஞ்சா​யத்து தலைவராக கைலாஷி பாய் கசாவா என்பவர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். கடந்த மாதம் இவர் தனது பதவிக்கான அதிகாரங்​கள், உரிமைகளை உள்ளூர் ஒப்பந்​த​தாரர் சுரேஷ் என்பவருக்கு தாரைவார்த்து உள்ளார். இதுதொடர்பாக இருவருக்​கும் இடையே ரூ.500 மதிப்புள்ள முத்​திரை தாளில் ஒப்பந்தம் கையெழுத்​தாகி உள்ளது. அந்த ஒப்பந்​தத்​தில் கைலாஷி பாய் கசாவா...
டெல்லி சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஆம் ஆத்மிக்கான நேரடி மோதலில், காங்​கிரஸ் கட்சி போட்​டி​யிலேயே இல்லாத நிலை இருந்​தது. 3-வது முறையாக இந்த தேர்​தலிலும் காங்​கிரஸ் கட்சிக்கு ஒரு தொகு​தி​யிலும் வெற்றி கிடைக்க​வில்லை. இருப்​பினும், இந்த தேர்​தலில் 6.34 சதவீத வாக்​குகளை பெற்றுள்​ளது. இது கடந்த 2020 தேர்​தலில் பெற்றதை விட 2 சதவி​கிதம் அதிகம். பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீத வாக்​குகளை பெற்றன. இவற்றுக்​கிடையேயான...
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ்...
விமானப்படையின் மிராஜ் ரக போர் விமானம் மத்தியப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 2 பைலட்டுகளும் உயிர் தப்பினர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் சென்றனர். நடுவானில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் சூழல் உருவானதால், பைலட்டுகள் இருவரும் பாராசூட் மூலம்...
ஆந்திராவில் சிறந்த முறையில் பணியாற்றி, கோப்புகளை சரிபார்த்து உடனுக்குடன் பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்களின் பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே நேற்று வெளியிட்டார். இதில் அவர் 6-ம் இடத்தில் உள்ளார். அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்ற வேண்டும் , அரசு ஆசிரியர் பணி இடங்கள்...
காங்கிரஸ் கட்சி அவசரநிலை காலத்​தில் பேச்​சுரிமையை நசுக்​கியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்​றம்​சாட்டி உள்ளார். நாடாளு​மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்​களாக மாநிலங்​களவை​யில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் நடைபெற்​றது. இந்த விவாதத்​துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசி​ய​தாவது: குடியரசுத் தலைவரின் உரை நமக்கு உத்வேகம் அளிப்​ப​தாக​வும் பயனுள்ள​தாக​வும் இருந்​தது. அத்துடன் நாம்...
பிஹாரில் சுதந்திர போராட்ட தியாகியின் பிறந்த நாள் விழாவில் அவரது மகனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்லால் சவுத்ரி சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தலித் தலைவரான இவர், பெண்கள் உரிமை, தலித் மேம்பாடு உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். தொண்டு நிறுவனம் சார்பில் இவருடைய பிறந்தநாள் விழா நேற்று முன்தினம்...
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், புதால் கிராமத்தில் கடந்த டிசம்பர் 7 முதல் ஜனவரி 19 வரை மர்ம நோய் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறுகையில், “17 பேர் மர்ம மரணம் தொடர்பான விசாரணை...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 8,715 பேர் நாகா துறவிகளாகி விட்டனர். இவர்களில் தலித் மற்றும் பழங்குடிகள் எண்ணிக்கை முதல்முறையாக 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமக் கரையில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கியது. நாட்டின் 13 அகாடாக்களின் அனைத்து துறவிகளும் இங்கு கூடியிருந்தனர். இவர்களது முகாமின் பல நிகழ்ச்சிகளில் முக்கியமானது புதிய துறவிகளை தங்கள் அகாடா குழுக்களில் சேர்ப்பது ஆகும். இந்தமுறை, 144 வருடங்களுக்கு...
யுஜிசி வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின்...