‘‘ஆம் ஆத்மி கட்சியின் மதுபான கொள்கை, அர்விந்த் கேஜ்ரிவாலை வீழத்தி விட்டது ’’ என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் நெருக்கமானார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரேவை அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கடி சந்தித்து பேசினார்....
தொழிலதிபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானியின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானிக்கும் வைர வர்த்தகர் ஜெய்மின் ஷா மகள் திவாவுக்கும் அகமதாபாத்தில் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானியின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளார். இதில் அரசியல்வாதிகள்,...
பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி டெல்லியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடி, மத்திய...
கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு: மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
admin - 0
மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்தியஅரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான...
பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர்: சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை – என்ன நடந்தது?
admin - 0
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கரில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சத்தீஸ்கர்...
ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் ஆதிஷி மட்டும் தனது வெற்றியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் எக்ஸ் பதிவில் கூறுகையில், “என்ன வெட்கமற்ற வீடியோ காட்சி இது. கட்சி தோற்றுவிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கேஜ்ரிவால், சிசோடியா, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட...
அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 4 ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில், அம்பேத்கர் நகர், கோகல்பூர், சீமாபுரி, மங்கள்புரி, சுல்தான்பூர் மஜ்ரா, பவானா, கரோல் பாக், படேல் நகர், தியோலி, மடிபூர், கொண்டிலி மற்றும் திரிலோக்புரி ஆகிய 12 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஆம்...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 19 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரத்தில் 19-வது செக்டாரில் “கல்பவாசி” கூடாரத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது. வாயு கசிவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் ஆதிஷி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பின்னர் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து 3-வது தேர்தலிலும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில்,...
டெல்லியில் பாஜக.வுக்கு கிடைத்த வெற்றி முக்கியமான அரசியல் மாற்றம்: சர்வதேச ஊடகங்கள் கருத்து
admin - 0
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக. பெற்ற வெற்றி, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இதை முக்கியமான வெற்றி, மிகப் பெரிய அரசியல் மாற்றம் என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டெல்லி தேர்தல் முடிவு, பிரதமர் நரேந்திர மோடியின் கட்சிக்கு முக்கியமான வெற்றி. நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் கட்டமைப்பில் கவனம் செலுத்தி பாஜக சிறப்பாக பிரச்சாரம் செய்தது. நகர்ப்புற மையங்களில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு...










