Google search engine
பெங்​களூரு தெற்கு துணை காவல் ஆணை​யர் லோகேஷ் ஜகலசர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்களூரு​ பீனி​யா​வில் குட்கா வியா​பாரி​களிடம் ஜிஎஸ்டி அதிகாரி​களின் பெயரை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடுபடுவ​தாக புகார் வந்​தது. இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலு​வலக தூய்மை பணி​யாளர்​களான நாக​ராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்​தோம். ஜிஎஸ்டி செலுத்​தாமல் பாக்கி வைத்​துள்ள வியா​பாரிகளை குறி​வைத்து அதி​காரி​ போல பேசி ரூ.5 லட்சம் வாங்​கி​யுள்ளனர்....
உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய ​நாத் தொழில் முதலீடு​களுக்​காக சிங்​கப்​பூர் மற்​றும் ஜப்​பான் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். உ.பி.​யில் சிங்​கப்​பூர் நிறு​வனங்​கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்​பான் நிறு​வனங்​கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​ நாத் ஜப்​பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்​கொண்​டுள்​ளார். தனது பயணத்​தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்​கியோவுக்கு சென்றடைந்​தார். அங்கு அவருக்கு...
ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே விபத்​துக்​குள்​ளான ஏர் ஆம்​புலன்ஸ் 6,600 மணி நேரம் பறந்த 39 ஆண்டு கால பழைய விமானம் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் ராஞ்​சி​யில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து பிப்​ர​வரி 23ம் தேதி இரவு 7.11 மணி அளவில் நோயாளி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் உட்பட 7 பேருடன் ஏர் ஆம்​புலன்ஸ் விமானம் டெல்லி இந்​தி​ரா ​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்தை...
பிஹாரின் பக்​சார் மாவட்​டம் முஃ​பாசில் காவல் எல்லைக்​குட்​பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்​கும் (18) உ.பி.​யின் பல்​லியா மாவட்​டத்தை சேர்ந்த இளைஞருக்​கும் நேற்று முன்​தினம் மாலை திரு​மணம் நடை​பெற இருந்​தது. அப்போது மணமேடை​யில் ஏறிய முகக்​கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்​தியை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பி​னார். காயம் அடைந்த ஆர்த்​தி, வாராணசி​யில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். ஆர்த்​தியை ஒருதலை​யாக காதலித்த தீன பந்து என்​பவர்...
என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடத் திட்டத்​தில், ‘நீ​தித்​துறை​யில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்​படுத்தி உள்​ளது. இதற்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்​பேன் என்​றும் எச்​சரித்​துள்​ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்​சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடத்​தில், நீதித்​துறை​யில் ஊழல் என்ற பகுதி இடம்​பெற்​றுள்​ளது. ‘நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு’ என்ற தலைப்​பில் அந்​தப்...
கேரளா​வில் அரசுத் திட்​டங்​கள் குறித்த விழிப்புணர்வை ஏற்​படுத்​த நவகேரளா குடிமக்​கள் திட்​டம் தொடங்கப்​பட்​டது.​ இதை எதிர்த்து கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் 2 பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இந்த திட்​டத்தை ரத்து செய்து உத்​தர​விட்​டது. தேர்​தலுக்கு முன்​ன​தாக, அரசி​யல் பிரச்​சா​ரத்​தைப் போன்ற ஒரு பெரிய அளவி​லான (வீடு வீடாக) ஆய்​வுக்கு பொது நிதி​யை​யும், அரசு இயந்​திரங்​களை​யும் பயன்​படுத்த முடி​யாது என்று உயர் நீதிமன்​றம் சுட்​டிக்​காட்​டியது. இந்​தத் தீர்ப்பை...
மேற்கு வங்க மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்ளிட்​டோர் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உச்​ச நீதிமன்றம், மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் சார்ந்த கோரிக்​கை, ஆட்​சேபனை மனுக்​களை பரிசீலிக்க மாவட்ட நீதி​சார் அலு​வலர்​களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்​தர​விட்​டது. மேற்கு வங்க அரசுக்​கும் தேர்​தல் ஆணை​யத்​துக்கும் இடையே ஏற்பட்ட நம்​பிக்​கையற்ற நிலை​யில் இந்த ஏற்​பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்​தி​யது. கூடு​தலாக ஜார்க்​கண்ட், ஒடிசா நீதி​சார் அலு​வலர்​களை...
டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப்புக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘பாரத் மண்டபத்தில் தேசிய அவமானம்' என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் உட்பட 277 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இளைஞர் காங்கிரஸார் நடத்திய சட்டையில்லாத போராட்டம் நாட்டின் மாண்புக்கு செய்யப்பட்ட துரோகம். அதுவும்...
உத்​த​ராகண்​டின் ஜோதிஷ்வர் மடத்​தின் சங்கராச்சாரி​யா​ராக இருப்​பவர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த். பிர​யாக்​ ராஜ் மகரமேளா புனித நீராடலின் ​போது அவரது ஆதரவாளர்​கள் மற்​றும் உ.பி. போலீ​ஸார் இடையே மோதல் ஏற்பட்​டது. இதில் அவரது ஆதர​வாளர் படு​காயமடையக் காரண​மான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​திடம் வலி​யுறுத்​தி​னார். பலன் இல்​லாத நிலை​யில் மகரமேளாவை புறக்​கணிப்​ப​தாகக் கூறி அங்​கிருந்து வெளியேறினார். இந்​நிலை​யில், மகரமேளா​வில் தனது முகாமில் சீடர்​களாக இருந்த சிறு​வர்​களில் மூவரை...
திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார். ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் கடந்த ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​ போது நெய்​யில் கலப்​படம் என்று தெரிந்தே வாங்​கிய​தாக தீவிர குற்றச்சாட்​டு​கள் முன் வைக்​கப்​பட்​டன. இதன் மீது...