சுரங்க விபத்தில் உயிரிழந்த 8 பேரில்,ஒரு தொழிலாளியின் சடலம் 16 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேரின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீசைலம் அணையின் இடதுபுற கால்வாயில் இருந்து தெலங்கானா மாநிலம், நல்கொண்டா வரை 14 கி.மீ தொலைவுக்கு சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாகர் கர்னூல், எஸ்எல்பிசி சுரங்க கால்வாயில் பணிக்கு சென்றவர்கள் மீது மேற்கூரை...
மதுபான கொள்கையில் நடந்ததாத கூறப்படும் ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல், அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதல்வராக பூபேஷ் பாகெல் இருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,161 கோடி அளவுக்கு...
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
admin - 0
“நாட்டில் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் நேற்று தொடங்கியது. மக்களவை காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடை சரிந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள ரங்மஹால் சதுக்கம் பகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏறி நின்று, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆளும் பாஜக அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
தெலங்கானா சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை விஜயசாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலங்கானாவில் காலியாக உள்ள 5 எம்எல்சி பதவிகளில் மூன்றில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் அதன் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. எஞ்சிய ஒரு பதவிக்கு எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி...
மகாராஷ்டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. 1707 மார்ச் 3-ம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக இந்த கல்லறை உள்ளது.
இந்நிலையில், கொடுங்கோல்...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அப்பல் நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும் மக்கள் தொகை பற்றி பேசுகிறார். நம் நாட்டில் 140 கோடி மக்கள் தொகை இருந்தாலும், வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இதை...
தங்க கடத்தல்: நடிகை ரன்யா ராவை காப்பாற்றுகிறதா காங்கிரஸ்… 12 ஏக்கர் நிலம் வழங்கியதா பாஜக? – பரஸ்பர குற்றச்சாட்டு
admin - 0
கர்நாடகாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவை காங்கிரஸ் பாதுகாக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக பாஜக ஆட்சியில் ரன்யா ராவ் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான...
பிஹாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிஹாரின் போஜ்பூர் மாவட்டம், அர்ரா நகரில் பிரபல நகைக்கடை செயல்படுகிறது. இந்த நகைக்கடை நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 10.15 மணிக்கு கடையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது 2 மர்ம நபர்கள் கடைக்கு...
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்பதா? – திமுக எதிர்ப்பால் தனது பேச்சை திரும்ப பெற்ற தர்மேந்திர பிரதான்
admin - 0
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்தார். ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று அவர் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாத விவகாரத்தை மக்களவையில் திமுக எம்.பி....










