அமலாக்கத்துறை விசாரணையில் அத்துமீறிய விவகாரம் – மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
admin - 0
ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 8ம் தேதி சோதனை நடத்தியது.
கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக்...
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவுக்காக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த இரண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்கள் ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகின்றனர். மேலும்,...
டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புள்ளிவிவரங்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
நேற்று நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 46% முதல் 50% வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் 41% வாக்குகளும், புனேவில் 36.95% வாக்குகளும் பதிவாகின. இது 2017 தேர்தலை விட சற்று அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத குழுக்களுக்காகப் பணியாற்றுவதாக கண்டறியப்படும் அரசு ஊழியர்களை துணை நிலை ஆளுநர் நிர்வாகம் பணி நீக்கம் செய்து வருகிறது.
கடந்த 2021-ல் இந்த நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவரை பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 85 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 5 அரசு ஊழியர்களுக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று பணி நீக்கம்...
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் 'ஜனநாயகன்'. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது.
இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா,...
அரசுப் பணியாளர்களுக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது.
இது தொடர்பாக பொதுநல வழக்காடு மையத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா கூறிய தீர்ப்பில், “அரசுப் பணியாளருக்கு எதிராக ஊழல்...
“ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்காமல் தடுப்பது, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு தணிக்கை சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ்...
தங்களது பணியாளர்கள் மீதான அழுத்தத்தை போக்கும் வகையில் 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டத்தை ஜெப்டோ, சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக விரைவு டெலிவரி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், 10 நிமிடங்களில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் வாடிக்கையாளர்களிடையே மிக பிரபலமாக உள்ளது.
ஆனால், இந்த திட்டம்...
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் 28-வது மாநாட்டை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 56 உறுப்பு நாடுகளில் 42 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு வரலாற்றிலேயே அதிகபட்ச நாடுகள் (61) கலந்து கொள்ளும் மாநாடாக இருக்கும் என்று மக்களைவை சபாநாயகர் ஓம்...
