காப்பீடு நிறுவனங்கள், நபார்டு, ரிசர்வ் வங்கி ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்
admin - 0
மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று கூறியிருப்பதாவது: பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும ஓய்வூதியதாரர்களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கு ரூ.8,170.30 கோடி செலவாகும்.
நபார்டு வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக சுமார் ரூ.170 கோடி செலவாகும். நிலுவைத் தொகையாக மட்டும் சுமார்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இங்கு சிஎஸ்ஐஆர்- என்ஐஐஎஸ்டி புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பி.எம்.ஸ்வாநிதி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயனாளிகள் பலருக்கு கடன்கள் மற்றும் கடன் அட்டைகளை வழங்கினார்.
ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நவீன ரேடியோ அறுவை சிகிச்சை மையத்துக்கும் அவர்...
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து ஜம்மு காவல்துறை ஐ.ஜி பீம் சென் துதி கூறும்போது, ‘‘கதுவா மாவட்டத்தில் உள்ள பிலாவர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உஸ்மான் என தெரியவந்தது. அவரிடமிருந்து எம்4 தானியங்கி துப்பாக்கி உட்பட ஏராளமான...
செல்போன் செயலி மூலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு மும்பை சர்ச்கேட் பகுதியைச் சேர்ந்த 68 வயது தொழிலதிபர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்றை அவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் பேசிய ஒருவர் பங்குச் சந்தை ஆலோசகராக அறிமுகமாகியுள்ளார்.
‘‘டிரேடர் டைட்டன் விஐபி 46” என்ற வாட்ஸ்அப் குழுவில்...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதையெட்டி, 286 கிலோ எடையுள்ள தனுசு (வில்) நேற்று அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இது, ராமர் கோயிலுக்கு காணிக்கையாக, ஒடிசாவின் சனாதன ஜாக்ரன் மஞ்ச் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இது, தமிழ்நாட்டின் கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் 48 பெண் கைவினை கலைஞர்களால் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டதாகும்....
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் நோக்கம் ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவதாக இருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையே ‘உரிமை’ என்ற வார்த்தைதான். தற்போது புதிய ஊரக வேலை சட்டத்தின் மூலம் உரிமை என்ற அடிப்படை...
குஜராத் மாநிலம், சூரத் நகரின் தட்கேஷ்வர் பகுதியில் 11 மீட்டர் உயரத்தில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
14 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.21 கோடி செலவில் இது கட்டப்பட்டது. இந்நிலையில் திறக்கப்படுவதற்கு முன் சோதனை முயற்சியாக, அண்மையில் இதில் சுமார் 9 லட்சம் லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டது. அப்போது குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள், 2 அதிகாரிகள்...
கேரள சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, திருவனந்தபுரத்தில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி வளாகத்தில் அமையவுள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மையத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அத்துடன் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட 4 புதிய ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இது தவிர, திருவனந்தபுரத்தில் ஒரு நவீன தபால் நிலையத்தையும்...
மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 17 மாநகராட்சிகளை பாஜக தனித்து கைப்பற்றியது. மும்பை உட்பட மேலும் 8 மாநகராட்சிகளை பாஜக, சிவசேனா (ஷிண்டே) அடங்கிய மகாயுதி கூட்டணி கைப்பற்றியது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒவ்வொரு மாநகராட்சியிலும் தனித்தனியாக குலுக்கல் நடத்தப்படும். இதன்...
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு கூட்டத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் தேவை” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ”எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி விவகாரங்களை எழுப்பும் போது மக்கள் தொகைக்கு ஏற்ப சாதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை என ராகுல் காந்தி பேசுகிறார்.
ராகுல்...
