Google search engine
கர்​நாடக மாநிலம் கொப்​பலில் மாகாணங்​களுக்கு இடையே​யான ஏற்​ற​தாழ்வை தீர்ப்​பது தொடர்​பான கருத்​தரங்​கம் நேற்று முன் தினம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பொருளா​தார ஆலோ​சகர் பசவ​ராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்​நாட​கா​வில் யார் முதல்​வ​ராக இருந்​தா​லும், எந்த கட்சி ஆட்​சி​யில் இருந்​தா​லும் ஊழல் அதி​க​மாக நடை​பெறுகிறது. ஊழலில் எப்​போதும் கர்​நாடகா முதலிடத்​தில் இருக்​கிறது. அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் நிறைந்​திருப்​ப​தால் தரமான வளர்ச்சி பணி​கள் நடை​பெறு​வ​தில்​லை. சுதந்​திரத்​துக்கு முன்பு கட்​டிய அரசு கட்​டிடங்​கள்...
ஆந்​திர மாநில முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு ஹைத​ரா​பாத்​தி​லும், திருப்​ப​தியை அடுத்​துள்ள சந்​திரகிரி மண்​டலம் நாரா​வாரிபல்லி கிராமத்​தி​லும் சொந்த வீடு உள்​ளது. இந்நிலையில், முதல்​வ​ர் சந்​திர​பாபு நாயுடு, தலைநகர் அமராவ​தி​யில் சொந்த வீடு கட்ட முடிவு செய்​தார். இதனை தொடர்ந்​து, நேற்று வெல​கபுடி செயல​கம், இ-9 தேசிய நெடுஞ்​சாலை​யில் 1,455 சதுர அடி​யில் வீடு கட்ட நேற்று அடிக்​கல் நாட்டு விழா நடந்​தது. அடிக்​கல் நாட்டு விழா​வில்மனைவி புவனேஸ்​வரி​யுடன் தம்​பதி சமேத​ராக பூமி...
குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கார்கே பேசியதாவது: கடந்த 1924-ம் ஆண்டு கர்நாடகாவின் பெலகாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மகாத்மா காந்தி ஏற்றார். இதை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி மிகப்பெரிய விழாவாக கொண்டாடி...
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானவுடன், நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்’’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறக்குமதிக்கு 26 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக...
கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2020 மார்ச் மாதம், கரோனா பெருந்தொற்று ஊரடங்கின்போது 14 வயது 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு அந்த மாணவியை அச்சுறுத்தி 2021 டிசம்பர்...
கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் 100 நாள் வேலை திட்​டம் என அழைக்​கப்​படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க கடந்த மார்ச் மாதத்​தில் மையங்​கள் தொடங்​கப்​பட்​டன. அப்​போது சில பஞ்​சா​யத்​துகளில் ஊதி​யத்​தில் மோசடி அரங்​கேறிய​தாக சிலர் புகைப்பட ஆதா​ரங்​களை அதி​காரி​களிடம் அளித்​தனர். அந்த புகைப்​படங்​களை கண்ட அதி​காரி​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அதாவது, ஏரி​யில் வேலை செய்​யும்​போது பெண்​களை போல சில ஆண்​கள்...
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர், இரண்டு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் எல்லையிலுள்ள சிக்கந்தராவில் பஹரியா பகுதியில் சையத் சாலார் மசூத் காஜியின் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் இந்த தர்காவுக்கு இந்துக்களும் வந்து வணங்கிச் செல்வது...
ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார் நகரில் கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் பங்கேற்றார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா, அக்கோயில் வளாகத்தில் கங்கை நீரை தெளித்து பூஜைகள் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கியான்தேவ்...
ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும், தொழில் செய்ய விரும்புவோர், கடின உடல் உழைப்பை பணியாக கொண்ட நபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களை தொழில் முனைவோராக மாற்றி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பிரதான் மந்த்ரி...
நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு (77) எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின்...