கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது.
உ.பி அரசின் புதிய...
தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
admin - 0
தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி, மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்கள் காகிதங்களை...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 291 வேட்பாளர்கள் பட்டியலை...
ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த மன்மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிஜு ஜனதா தளத்தில் சான்ட்ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்றார். அந்த கட்சியின் மற்றொரு வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோடா தோல்வி அடைந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. காங்கிரஸின் 14 எம்எல்ஏக்களில் 3 பேர் அணி...
ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? – ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு
admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் நகரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா கட்டிடம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, போஜ்சாலாவை கோயிலாக மாற்ற இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உள்ளே இருக்கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்குதான் இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இது மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் 25 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாகும்.
மேற்கு வங்கத்தில் 2006ம் ஆண்டு 5, 2011ம்...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
பிராந்திய பதற்றம் பற்றி தெரிந்திருந்தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை ? பொதுமக்களின் கவலையைப் போக்க எதிர்க்கட்சிகளை ஏன் ஒருங்கிணைக்கவில்லை ? எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத்...
ஒடிசாவின் கட்டாக் நகரில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அமைச்சர் முகேஷ் மகாலிங்குடன் மருத்துவமனைக்கு சென்று, நிலைமையை ஆய்வு...
மேற்கு வங்கத்தில் 144 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி
admin - 0
மேற்கு வங்கத்தில் 144 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதி, 2ம் கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை...
மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள்...










