மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா  போஸ்லேவின் பிறந்தநாளில் வெளியான அவரது கடைசி பாடல் முதல் தனது படத்தின் முதல் பாடல்  வெளியீட்டு தேதியை அறிவித்த ரவி மோகன் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இவை...  > மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே கடைசியாகப் பாடிய திரைப்படப் பாடல் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. 'ஓம் கா ஹரி' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில்...
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தில் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. ரவி மோகன் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், ‘ஒரு புதிய இசை வனத்துக்குள் நுழைந்துள்ளது. புதிய அத்தியாயம், அதே ஆன்மா. உங்களுக்கு அறிமுகமான கலைஞர், இதுவரை கேட்டு இருக்காத புதிய பாணியில் ‘அன் ஆர்டினரி...
மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கமல் - த்ரிஷா நடித்திருந்த ‘தக் லைஃப்’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி  – சாய் பல்லவி நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக் ஷன்ஸ் வழங்குகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தலைப்பிடப்படாமல் இருந்த...
த்ரிஷாவின் வாழ்த்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த மாளவிகா மோகனன் முதல் சூரியின் பாராட்டுகள் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இது. >> விஜய் சாருடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும், “ஹாய் பேபி. உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு. வாழ்த்துகள்” என த்ரிஷா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதைச் சொல்வதற்கு நல்ல மனது வேண்டும் என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். >> மாரி செல்வராஜ் தனது...
சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘பிக்காசோ’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், பட்டாசுகளின் நடுவே குறும்புத்தனமான தோற்றத்தில்...
தமிழ்​நாட்​டின் அரிய கானுயிர்​கள் மற்​றும் பல்​லு​யிர்ச் சூழல் ஆகிய​வற்​றைப் பிரம்மாண்​ட​மாகக் காட்​சிப்​படுத்​தி​யுள்ள ‘வைல்டு தமிழ்​நாடு’ என்ற ஆவணப்​படத்​தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இதை நாடு முழு​வதும் உள்ள பி.​வி.ஆர் மற்​றும் ஐநாக்ஸ் திரையரங்​கு​களில் பொது​மக்கள் காணலாம். காப்​புக் காடு​கள், அவற்​றின் அரணாக விளங்​கும் மேற்​குத் தொடர்ச்சி மலை, வளம் மிக்க சமவெளி, வறண்ட பாலை, மீன்​வளம் மிக்க நீண்ட பெரும் கடற்​கரை என தமிழ்​நாட்​டின் ஐந்​திணை நிலங்​களில்...
பிக் பாஸ் தமிழ் சீசன் 10' தொடக்க நிகழ்ச்சியின் போதே திரைப்பட விமர்சகரும் யூடியூபருமான பிரசாந்த் ரங்கசாமி, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து எவிக்ட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சித் தொடக்கத்தின் போது பிரித்விநாத், ஜாவீத் ஷெரிப் மற்றும் பிரசாந்த் ரங்கசாமி ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, இவர்களில் இருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்று அறிவித்தார். உடனடியாகத் நேரடி...
ஜெய் ஜோடி​யாக பிரி​யங்கா மோகன் நடிக்​கும் படத்தை எம்​.எஸ்​.ஆனந்​தன் இயக்​கு​கிறார். இன்​னும் பெயரிடப்​ப​டாத இந்​தப் படத்​தில் யோகி​பாபு, ராஜீவ் மேனன், நாசர் உள்பட பலர் நடிக்​கின்​றனர். ஏஜிஎஸ் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் கல்​பாத்தி எஸ்​.அகோரம், கல்​பாத்தி எஸ்​.கணேஷ், கல்​பாத்தி எஸ்​.சுரேஷ் தயாரிக்​கின்​றனர். கிரியேட்​டிவ் தயாரிப்​பாள​ராக அர்ச்​சனா கல்​பாத்தி உள்​ளார். இப்​படத்​துக்கு ரவி பஸ்​ரூர் இசை அமைக்​கிறார். பாலசுப்​பிரமணி​யெம் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.
இளை​ய​ராஜா, ராம​ராஜன் இணை​யும் புதிய திரைப்​படத்​துக்கு ‘கட​வுள் தந்த பரிசு’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் காசி​மாயன் கதை, திரைக்​கதை எழு​தி, இயக்​கு​கிறார். வசனத்தை ராஜகோ​பால், எம்.அடைக்​கலம் இரு​வரும் எழுதுகின்​றனர். செந்​தில், கோவை சரளா இரு​வரும் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, இதில் ராம​ராஜனுடன் இணை​கின்​றனர். இப்​படத்தின் பணி​கள் பாடல் பதிவுடன் தொடங்​கியது. அதை தொடர்ந்து படப்​பிடிப்​புக்​கான பணி​கள்​ நடை​பெற்​று வருகின்​றன.
ரிஷி காந்த், அனிஷ்மா அனில்​கு​மார் முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்ள திரைப்​படம் ‘மொத ராத்​திரி’. ராஜா கருப்​ப​சாமி இயக்​கி​யுள்ள இதில் சேத்​தன், அப்​துல் லீ, பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் ஆக. 21-ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்த இந்​தப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி கூறும்​போது, “6 வருடத்​துக்கு முன்​னால் இந்த கதையை எடுத்​துக்​கொண்டு...