நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சங்கீதா விஜயை பிரந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மனுவில், விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில்...
‘ரஜினி 173’ படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தினை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை....
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தினை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை...
பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘மேட் இன் கொரியா’. இதன் படப்பிடிப்பு கொரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது இப்படம் நேரடியாக ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவத்தில் கேட்ட...
ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள அடுத்த 2 புதிய படங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக 2 படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதில் ஒரு படத்தினை விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஹாட்...
அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கியுள்ள படம் ‘வெஞ்சென்ஸ்’. இதில் அபர்ணதி, சச்சு, ஒய்.ஜி.மகேந்திரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா, அருண் ராஜ் இசை அமைத்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குநர் ராகுல் அசோக் கூறும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படம் இயக்கிய அனுபவத்தின் மூலம் இதை இயக்கி இருக்கிறேன். இது வேணி என்கிற ஒரு...
‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி, நடிக்கும் படத்துக்கு ‘அன்பே டயானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். நியோ கேசில் கிரியேஷ்ன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் தோற்றத்தை இசை...
‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற படத்தை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்ளார். பிப்.27-ல் வெளியாக இருக்கும் இப்படத்தில் உல்கா குப்தா, அதிதி பாடியா, ஐஸ்வர்யா ஓஜா முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் சில பெண்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி...
திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர்...
‘ஜமா’ இயக்குநர் பாரி இளவழகனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஜமா’ படத்தினை இயக்கி, நாயகனாக நடித்தவர் பாரி இளவழகன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கி, நாயகனாக நடித்து வந்தார் பாரி இளவழகன்.
இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் 7-வது படமாக இது...










