‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரம்தான் என்று தெரிந்தே நடித்தேன் என ப்ரியதர்ஷி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியதர்ஷி. நாயகனாக நடித்து வரும் நிலையில், எப்படி இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது நானி தயாரித்துள்ள ‘கோர்ட்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்தது குறித்து பேசியிருக்கிறார் ப்ரியதர்ஷி.
அதில்...
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்படம் முதற்கட்டப் பணிகளிலேயே கைவிடப்பட்டது.
சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக சிவகார்த்திகேயன் - பேஷன் ஸ்டூடியோஸ் கூட்டணியின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தக் கதையை நானியிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி....
தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன்.
மனைவியை விவகாரத்து செய்தவுடன், மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ரவி மோகன். தனது பிறந்த நாளன்று ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், இனி ரவி மோகன் என அழைக்கவும் எனவும் குறிப்பிட்டார். தற்போது ‘பராசக்தி’ மற்றும் ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன்.
இந்த இரண்டு படங்களின்...
‘குலாபி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா.
‘தசரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார் ஸ்ரீகாந்த் ஓடிலா. அதனைத் தொடர்ந்து மீண்டும் நானியுடன் இணைந்து ‘தி பாரடைஸ்’ படத்தை உருவாக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிமுக டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஸ்ரீகாந்த் ஓடிலா தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். ‘குலாபி’ எனப்...
உலகளவில் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முந்தி சாதனை புரிந்திருக்கிறது ‘டிராகன்’.
2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. அஜித் படம் என்பதால் முதல் 3 நாட்கள் வசூல் அதிகப்படியாக இருந்தது. மேலும், சிங்கப்பூரில் ‘விடாமுயற்சி’ நல்ல வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது, எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள் திரையுலகில்.
இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின்...
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன். இவர் ‘அன்டர்வேர்ல்ட்: ரைஸ் ஆஃப் த லைகன்ஸ்’, ‘தி ட்விலைட் சாகா: நியூ மூன்’, ‘மிட்நைட் பாரிஸ்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள போர்ட் டால்போட் நகரில், டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த ஆண்டுதனது எஃகு ஆலையை மூடியதால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தனர். இதனால் இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. அவர்கள் குடும்பத்துக்காக வாங்கிய...
தமிழில் ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு...
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் இப்போது ‘வார் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தொடர்ச்சியாக உருவாகிறது. இந்தப் படத்துக்கான நடனக்காட்சியை மும்பையில் படமாக்க இருந்தனர். ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆரும் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டது....
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
மைசூரில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது தான் கார்த்திக்கு காலில் அடிபட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. கார்த்தி ஒய்வெடுத்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். முதலாவதாக கார்த்தியின் காட்சிகளோடு டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கார்த்திக்கு கால் சரியானவுடன் மீண்டும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்....
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுஷலுடன் அவர் நடித்து பிப்.14-ல் வெளியான ‘ஜாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு...










