தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன்.
மனைவியை விவகாரத்து செய்தவுடன், மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ரவி மோகன். தனது பிறந்த நாளன்று ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம், இனி ரவி மோகன் என அழைக்கவும் எனவும் குறிப்பிட்டார். தற்போது ‘பராசக்தி’ மற்றும் ‘கராத்தே பாபு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன்.
இந்த இரண்டு படங்களின் பணிகளையும் முடித்துவிட்டு, இயக்குநராக அறிமுகமாக முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன். இதற்காக படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இக்கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.
பல பேட்டிகளில் இயக்குநராகும் ஆசை குறித்து, அதில் யோகி பாபு நடிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார் ரவி மோகன். ஆனால், அது இந்தாண்டே நடிக்க உறுதியாகி இருக்கிறது.