மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
19

‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது.

நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ ராஜ் வழங்​கும் இந்​தப் ​படத்தை ஃபார்​சூன் என்​டர் ​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். சென்​னை​யில் இளை​ய​ராஜா நடத்​திய இசை நிகழ்ச்​சி​யில் இப்​படத்​தின் தலைப்பு அறிவிக்​கப்​பட்​டது.

வேல்ஸ் பிலிம் இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில் தனுஷுடன் மாரி செல்​வ​ ராஜ் இணை​யும் வரலாற்​றுத் திரைப்​படத்​தின் பணி​கள் ஏற்கெனவே நடை​பெற்று வரு​கின்​றன. அந்​தப் படத்​துக்கு ஏ.ஆர்.ரஹ்​மான் இசையமைக்​கிறார்.

இப்​படத்​துக்​காக விரி​வான முன்​த​யாரிப்பு பணி​கள் நடை​பெற்று வரு​வ​தால், அதற்​கிடையே ‘மஞ்​சணத்​தி’ படம் உரு​வாக இருக்கிறது. இதில் கயாடு லோஹர், பிரி​யங்கா மோகன் ஆகியோர் நாயகி​களாக நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here