பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் இப்போது ‘வார் 2′ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இன்னொரு ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். கியாரா அத்வானி உட்பட பலர் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தொடர்ச்சியாக உருவாகிறது. இந்தப் படத்துக்கான நடனக்காட்சியை மும்பையில் படமாக்க இருந்தனர். ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆரும் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹிருத்திக் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் 4 வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest article
குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...
குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...
பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...














