Google search engine
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘ஓஜி சம்பவம்’ பாடல் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடி உள்ளனர். அவர்களோடு ஆறு பேர் கோரஸ் பாடி உள்ளனர். இந்த பாடலின் வரிகளை...
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (56). இண்டிபண்டன்ஸ் டே, மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இசைக்கலைஞருமான இவர், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். முதலில் சிலருடன் இணைந்து பாடல்களை வெளியிட்டு வந்த அவர், 1997-ம் ஆண்டு தனியாக ‘பிக் வில்லி ஸ்டைல்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது அப்போது வரவேற்பைப் பெற்றது. கடைசியாக, 2005-ம் ஆண்டில், ‘லாஸ்ட் அன்ட் பவுன்ட்’ என்ற...
‘​காதலில் சொதப்​புவது எப்​படி?’, ‘கா​விய தலை​வன்’, ‘இறு​திச்​சுற்​று’, ‘விக்​ரம் வேதா’ என பல படங்​களை, தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்​பில் தயாரித்​தவர் எஸ். சஷி​காந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். மாதவன், சித்​தார்த், நயன்​தா​ரா, மீரா ஜாஸ்​மின் இணைந்து நடித்​துள்ள இந்​தப் படம் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் ஏப்​.4-ல் நேரடி​யாக வெளி​யாகிறது. இந்​தப் படம் குறித்து சஷி​காந்​திடம் பேசினோம். இந்​தப் படத்​துல பெரிய நட்​சத்​திரங்​கள்...
‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்து சாதனை புரிந்த படம் ‘புஷ்பா 2’. சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், அப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை. இதனால் ‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ரவி இதற்கு பதிலளித்துள்ளார். ‘புஷ்பா 3’ தொடர்பான...
ஆர்யா நடிப்பில் பிரபலமான ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ’கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றியால், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மார்ச் 21-ம் தேதி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது....
விளையாடும் போது விபத்தில் சிக்கிய இந்தி நடிகை பாக்யஸ்ரீ-க்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ. இந்தியில் சல்மான் கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘பயோபிக்’கான ‘தலைவி’யில் ஜெயலலிதாவின் தாயாக நடித்திருந்தார். இவர், சமீபத்தில் ‘பிக்கில் பால்’ (டென்னிஸ், பாட்மின்டன் விளையாட்டுகளின் கலவை) விளையாட்டில் பங்கேற்றார். அப்போது...
சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை அடுத்து இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ என்ற படத்தை இயக்கி யுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும் என்று கூறப் படுகிறது. இதையடுத்து சசி இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா நடிக்கிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம்...
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில், ரஜினி மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மலையாள குணசித்திர நடிகை ஷைனி சாராவிடம்...
பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர் தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாகப் பல கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இது மட்டுமே என்னுடைய கணக்கு. இது தவிர வேறு கணக்கு இல்லை. மற்றவை போலிகள்....
கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் நாயகன் சத்யாவுக்கு ('மெட்ரோ‘ சத்யா), கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. வாங்கும் சம்பளத்தில் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு கொஞ்சம் அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அவரின் நாகரிக மோகத்துக்கு, வாங்கும் சம்பளம் போதவில்லை. இதனால் ஒரு பக்கம் வேலை பார்த்துக்கொண்டே ஆளரவமற்ற இடங்களில், தனியாக வரும் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அது அவரை எங்கு கொண்டு...