‘ரிலீஸ் தாமதமானால் ரூ.10 கோடியை குறைப்போம்’ – குபேரா தயாரிப்பாளரை மிரட்டிய ஓடிடி நிறுவனம்?
admin - 0
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 -ல் வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் பிரைம் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தாமதமானால்...
ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.
நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக உருவாகும்...
இந்திப் பட இயக்குநரான விவேக் அக்னிகோத்ரி, ‘த தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ என்ற படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார்.
இதையடுத்து அவர் இயக்கி, 2022-ம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் ‘த வேக்ஸின் வார்’ என்ற படத்தைக் கடந்த ஆண்டு இயக்கினார். இது அதிகம் பேசப்படவில்லை.
இப்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்: த பெங்கால் சாப்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்...
அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பிரவீன் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைக்கிறார். ஜெர்ரிஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் ஜெர்ரி கூறும்போது, “கிரிக்கெட் விளையாடச் செல்லும் நண்பர்கள் எதிர்பாராத...
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் நடந்தது. படப்பிடிப்பில் மகேஷ்பாபு, பிருத்விராஜ் பங்கேற்ற காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மாதவன் இணைய உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அக்.14-ல் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சவுபின் சாஹிர், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.
“முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்தின்...
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் ஆறாவது திரைப்படமான இதில், ஹிருத்திக்ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் படம் ஆக.14-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு மனித இயந்திரம் போலுள்ள ஜாக்கெட்டை உருவாக்கியதாக பிரபல ஆடை...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் செப்.5-ல் வெளியாக இருக்கிறது. இப்போது சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘த கோட்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது. ‘த கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட...
அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நாயகன் ஜீவா (விஜித் பச்சான்), குழந்தை கடத்தல் வழக்குக்காகக் கைது செய்யப்படுகிறார். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அதைச் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவர் போலீஸிடம் சில ரகசியங்களைச் சொல்கிறார். செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி ஜீவா சிறைக்குச் சென்றது ஏன்? போலீஸாரிடம் அவர் தெரிவித்த ரகசியம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது, படம்.
உலகம் வேகமாக...
‘ஜனநாயகன்’ விநியோக உரிமை விற்பனை தொடர்பாக விஜய் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டது ‘ஜனநாயகன்’ படக்குழு. இதர நடிகர்களை வைத்து சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியதிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க...










