‘புஷ்பா 2’ படத்தின் கொண்டாட்டத்தை முழுமையாக அல்லு அர்ஜுன் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் ரூ.1,800 கோடி வசூலை நெருங்கி வருகிறது ‘புஷ்பா 2’. ‘பாகுபலி 2’ படத்தின் வசூலைத் தாண்டி, தற்போது உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் ‘டங்கல்’ திரைப்படம் இருக்கிறது.
‘புஷ்பா 2’ பட வெளியீட்டின் போது சந்தியா திரையரங்கில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஒர் இரவு ஜெயிலில் கழித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர், அல்லு அர்ஜுனை கடுமையாகச் சாடினார்.
இதனால் தொடர்ச்சியாக அல்லு அர்ஜுனை ‘புஷ்பா 2’ சர்ச்சைகளில் சிக்கினார். இதை வைத்து கிண்டல்களுக்கும் ஆளானார். இதெல்லாம் மனதில் வைத்து ‘புஷ்பா 2’ பட வெளியீட்டிற்குப் பிறகான அனைத்து விளம்பரப்படுத்தும் நிகழ்வையும் தவிர்த்துவிட்டார். வட இந்தியாவில் நடைபெற்ற ஒரே ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டார்.
அதற்குப் பிறகு படக்குழுவினர் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். அவை அனைத்தையும் அல்லு அர்ஜுன் நிராகரித்துவிட்டதால், நிகழ்ச்சியினை ரத்துவிட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக ‘புஷ்பா’ படத்தின் கெட்டப்பில் இருந்த அல்லு அர்ஜுன், அதிலிருந்து மாறி இருக்கிறார். அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.