நடிகர் அஜித் சார் ஒரு சிறந்த மனிதர் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படமொன்று தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் இது முழுமையான படம் என்றும், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் விஜய் பேட்டி யொன்றில் தெரிவித்திருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு...
‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய பட்ஜெட்களில் நல்ல கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தாய் கிழவி’ எப்படி இருக்கிறது என பார்க்கலாம். கருமாத்தூர் எனும் கிராமத்தில் வாழும் முதிய பெண் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்). கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குக் கடன் கொடுத்த பணத்தை...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்துக்கு 'டெக்ஸ்லா' எனப் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில், சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. '3', 'வை ராஜா வை', ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் நான்காவது திரைப்படம் இதுவாகும். 'வை ராஜா வை' படத்துக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர்...
வெங்​கட் பிரபு இயக்​கிய சென்னை 28, சென்னை 28-2 ஆகிய திரைப்படங்​களை இணைத் தயாரிப்பு செய்த கேஜே சரவணா, தனது தந்த்ரா பிலிம்ஸ் சார்​பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்​லும் 2 திரைப்படங்​களைத் தயாரிக்​கிறார். இந்​தப் படங்​களின் தலைப்​பு​களான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்​மன்’ ஆகிய​வற்றை வெங்​கட் பிரபு வெளியிட்​டார். ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக...
மாலா மணி​யனின் ஃபர்​ஸ்ட் காபி புரொடக்​ஷன்ஸ் தயாரித்​துள்ள திரைப்​படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படம் மூலம் இயக்குநராக அறி​முக​மாகிறார். ஹரி​கிருஷ்ணன் நாயகனாக நடிக்​கும் இப்​படத்​தில் கோவையைச் சேர்ந்த அக் ஷிதா நாயகி​யாக நடித்​துள்​ளார். நிவாஸ், வித்​யா, காளி வெங்​கட் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அரோல் குரோலி இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ராஜா பட்​டாச்​சார்ஜி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படம், மகளிர் தினத்தை முன்​னிட்டு மார்ச் 8-ம் தேதி மதுரை​யில் உள்ள கோபுரம்...
கமக்யா நாராயண் சிங் இயக்​கத்​தில் விபுல் ஷா தயாரித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படம் நேற்று (பிப்​.27) வெளி​யா​வ​தாக இருந்தது. இந்நிலை​யில் இந்​தப் படத்​தைத் தடை செய்​யக் கோரி தேவ் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் சார்​பில் கேரள உயர் நீதிமன்றத்​தில் மனுக்​கள் தாக்​கல்செய்​யப்​பட்​டன. கேரளாவை வகுப்​பு​வாத கண்​ணோட்​டத்​தில் காட்டுவதாகவும், இது சட்​டம், ஒழுங்கை பாதிக்​கக் கூடும் என்​றும் மனு​வில் குறிப்​பிடப்​பட்டு இருந்​தது. இவ்​வழக்​கின் வாதங்​களைக் கேட்ட...
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கீதா விஜயை பிரந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில், விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில்...
‘ரஜினி 173’ படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தினை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை....
’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும் கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தாணு தயாரித்து வரும் இப்படத்தினை வெற்றிமாறன் இயக்க, சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனை...
பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘மேட் இன் கொரியா’. இதன் படப்பிடிப்பு கொரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது இப்படம் நேரடியாக ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் கேட்ட...