கதையின் நாயகர்களாக ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் படத்தை, ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கிய ராம்தேவ் இயக்குகிறார்.
கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு, நிழல்கள் ரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தைக் கண்ணகி மைந்தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, ”இது அரசியல் நையாண்டி, காமெடி திரைப்படம். சமூகத்துக்குத்...
சிந்தியா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.
அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன்....
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் தாக்கிக்கொண்டனர்.
முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகத் துப்பாக்கி மோதலில் ஈடுபடவில்லை. இம்மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மோதல்...
‘த ராங் மேன்’ 1956: ‘மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ்’ – ஹிட்ச்காக்கின் சென்டிமென்ட் காவியம் | ஹாலிவுட் மேட்னி 12
admin - 0
தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் ஒரு நிரபராதியின் மொத்த குடும்பமும் சிதைந்து போவதுதான் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘த ராங் மேன்- 1956’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. நியூயார்க் நகரின் ஸ்டார்க் கிளப்பில் ‘ஸ்ட்ரிங் பேஸ்’ இசைக் கருவியை வாசிக்கும் கலைஞன், கிறிஸ்டோபர் இமானுவேல் மேனி பேலெஸ்ட்ரேரோ, கச்சேரியை முடித்துவிட்டு ஒரு ரயிலில் பயணிக்கிறான். கையில் இருக்கும் பேப்பரில், ரேஸ் பகுதியை வட்டமிடுகிறான்.
வீட்டுக்கு வந்தால் மனைவியும், இரு மகன்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
அறிமுக இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள அனிமேஷன் படம், ‘கிகி அண்ட் கொகொ’. இனிகா புரொடக் ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் இது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் நாராயணன் பேசும்போது, “ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல ஃபேன்டசி விஷயங்களைத்தான் குழந்தைகளுக்கு சினிமாவில் அறிமுகப்படுத்து கிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம்....
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நந்தினி, பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு,...
நாங்கள் சென்னை ராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவில் குடியிருந்த போது (நான் பொறுப்பற்று, ரவுடித்தனமாக திரிந்து கொண்டிருந்த போது) அதே தெருவில் குடியிருந்தவர் நாராயண ஐயர் என்கிற மோதிரம் நாராயணன். நாம் பழகிய சில கதாபாத்திரங்களை வாழ்வில் மறக்க முடியாது.
சிலர் முற்றிலும் வித்தியாசமாக இருப்பார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? என்று நமக்கு தோன்றும். அவர்களிடம் கேட்டால், ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கென்ன குறைச்சல்’ என்பார்கள். அது போல்தான்...
விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜன. 9 -ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் என பலர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு கைகாட்டிவிட்டு தனது காரில் விஜய் ஏற முயன்றார். அப்போது, அவருடன்...
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிகிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில் படப்பிடிப்புக்கான தேதிகள்...
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட இருக்கிறது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா எந்தவொரு படத்தினையும் இயக்காமல் உள்ளார்.
தற்போது தனது...
