‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கையில் பல்வேறு காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு.
முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும்...
கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட ‘த்ரிபின்னா’ என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்பத்தை, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஸ்வரயோகா குழுவினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்கம் வாசிக்க, ‘த்ரிபின்னா’ ஆல்பத்தில் உள்ள இசையமைப்புகளை கணேஷ் ராஜகோபாலன் நேரடியாக வாசித்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கர்னாடக இசைக்கலைஞர்களான கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார், வயலின் கலைஞர் குமரேஷ், வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்ளிட்ட...
'டாணாக்காரன்' திரைப்படத்தின் மூலம் காவல்துறை பயிற்சியில் நடக்கும் அநீதிகளைத் தோலுரித்துக் காட்டிய இயக்குநர் தமிழ், தற்போது கதாசிரியராக தனது முத்திரையை மீண்டும் ஆழமான பதித்திருக்கும் படம் ‘சிறை’. சிறுபான்மையினரின் போராட்டங்களையும், அதிகார வர்க்கத்தின் பாரபட்சமான போக்கையும் பேசியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதை 2000-களின் தொடக்கத்தில் நடக்கிறது. ஆயுதப்படையில் தலைமைக் காவலராக இருக்கும் கதிரவனிடம் (விக்ரம் பிரபு) ஒரு கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக இருக்கும் அப்துல்...
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், ‘ஜனநாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி என பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9-ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்திருப்பதால் ‘ஜனநாயகன்’ அவருடைய கடைசி திரைப்படமாகும். இதனால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத்...
மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ், சாஹிதி அவான்சா, கல்லூரி வினோத் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘த்ரிகண்டா’. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், ஷாஜித் இசையமைத்துள்ளனர். எஸ்விஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில், நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். ‘மாஸ்டர்’ படம் எனக்குத் தெலுங்கில் நல்லஅறிமுகத்தைக் கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ்,...
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இதன் மினி கேசட்டை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் மனோஜ் கூறும்போது, “மூன்வாக் முழுநீள நகைச்சுவை திரைப்படம். அதே நேரம்,...
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ்
admin - 0
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள படம், ‘பராசக்தி’ ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜன. 10-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, இணை இயக்குநரான ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி...
மலையாள நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்தபோது, சண்டைக்காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டு கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் கடந்த புதன்கிழமை வீடு திரும்பினார். மருத்துவர்கள் அவரை 2 வார காலம் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அவர் காயமடைந்ததை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர். இது...
பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘டியூட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது....
அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ். பின்னர் ‘எவ்ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்சுவைத் தொடரிலும் தோன்றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்கோவின் ‘குட் டைம் மேக்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அதில் யங் ஆடமாக...
