கிஷோர், தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மெல்லிசை’.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனை கொண்டுள்ள இப்படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன், “முதல் பார்வை...
‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அதிக வருவாய் ஈட்டி வருவதாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம்,...
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ‘தேவரா’, ‘வார் 2’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்து ஒரு வெற்றி படம் அவசியம் என்ற...
விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.
விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’....
மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரன்வீர் – தீபிகா தம்பதியர்!
admin - 0
பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன்...
‘இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை உருவாக்கி வருகிறார்’ – அட்லிக்கு ரன்வீர் சிங் புகழாரம்
admin - 0
இந்திய சினிமா பார்த்திராத விஷயத்தை அட்லி உருவாக்கி வருகிறார் என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
’சிங் தேசி சைனிஸ்’என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி...
புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.
அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம்,...
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட...
“நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில...
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ்...










