ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3’. இதில் நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிவந்தனர். நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி சரத்குமார் இருந்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இதன் இறுதிப்போட்டிக்கு தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா - காகனா, திலீப்- மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள்...
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலைக் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘போகி’. உண்மைச் சம்பவக் கதையான இதில், நபி நந்தி, சரத், சுவாஸிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். ராஜா சி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு மரியா மனோகர் இசை அமைத்துள்ளார்.
வி.ஐ.குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ள இதை விஜயசேகரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “ஒரு...
வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'. அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சின்னத்தம்பி புரொடக் ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பு செய்துள்ள...
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆக. 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர்...
பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்கிறார். இதை உன்னி முகுந்தன் பிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் இதில் நடிக்க இருக்கிறார். அவர் நடித்து வெளியான ‘மார்கோ’, அதிகமான வன்முறைக்காக...
உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், 'சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஃப்.எஸ்.ஃபைசல் இசையமைக்கிறார். செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் என்ற நிறுவனம் மூலம்மும்பை தொழிலதிபர் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
படம்பற்றி பேசிய பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா, "தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னையில் தொடர்வது போன்ற கதையை கொண்ட...
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக 'இசை' படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது.இப்போது அவர் இயக்கும் படத்துக்கு 'கில்லர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில்...
இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்' என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்', ‘ராஜாகிளி', ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம்...
‘பைனலி' யூடியூப் மூலம் பிரபலமான பாரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மிஸ்டர் பாரத்’. நிரஞ்சன் இயக்கியுள்ள இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். இதை பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம்,லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரணவ் முனிராஜ் இசை அமைத்துள்ள...
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரும், கன்னட நடிகருமான ரெட் அண்ட் ஒயிட் செவன்ராஜ் தயாரிக்கும் படம், ‘குப்பன்’. கடந்த 35 வருடங்களாக கன்னட படங்களில் நடித்து வரும் செவன்ராஜ், 4 கன்னடபடங்களையும் ஒரு மலையாளப் படத்தையும் தயாரித்துள்ளார். ‘குப்பன்’ மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இதில்' ஜெய் பீம்' மொசக்குட்டி, சிபு சரவணன், ஆதித்யா வினோத்,செவன்ராஜ், டாக்டர் முகமத்கான், பவித்ரா, பன்னீர், ஸ்ரீராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சசிகுமார். எஸ் இயக்கியுள்ளார்.
ஒரு தந்தை...










