நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘45 தி மூவி’படத்தில் இடம்பெற்ற ‘ஆஃப்ரோ தபாங்’ பாடல் வைரலாகி வருகிறது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஏற்கெனவே இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் கானா...
இந்தியில் பிரபல டி.வி. சீரியல் நடிகையாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், ஆன்மீகப் பாதைக்கு திரும்பி இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் தங்கி அமைதியான எளிய வாழ்க்கை வாழ்கிறார்.
இந்தியில் சக்திமான் உட்பட 155-க்கும் மேற்பட்ட டி.வி. சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நூபுர் அலங்கார். இவர் தனது பணத்தை பிஎம்சி வங்கியில் சேமித்து வைத்திருந்தார். முறைகேடுகள் காரணமாக இந்த வங்கி வாரியத்தை ரிசர்வ் வங்கி கடந்த...
அஜித் – ‘எஃப்.ஐ.ஆர்’ மனு ஆனந்த் இருவரும் இணைந்து பணிபுரிய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
’குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜித். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.
இப்படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் மனு ஆனந்த். இவர் இயக்குநர் கவுதம்...
கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதற்கு நடிகர் ஷாருக்கான் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்திய அளவில் மிக பிரபலமான நடிகரான ஷாருக்கான் இன்று (நவ.02) தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம்....
விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதே போல ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் பின்னர் அப்படம் குறித்த...
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வரும் படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது....
’சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரத்திற்கு இயக்குநர் அருண்பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார்.
இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார்....
தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது.
2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.13 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
இதன் இந்தி ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டன. பல்வேறு முன்னணி நாயகிகள் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அடுத்த...
ஹாலிவுட் மற்றும் பிரிட்டீஷ் திரைப்படங்களின் பாதிப்பில், தனது 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர், வட இந்தியரான கே.அமர்நாத். ஆரம்ப காலகட்டங்களில் திரைப்படங்கள் அதிகமாக உருவான கொல்கத்தாவுக்குச் சென்ற அவர், அங்கு நடிப்பதற்கு வாய்ப்புகளைத் தேடினார்.
பின்னர் மும்பைக்குத் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சில படங்களில் நடித்தார். பிறகுதான், சினிமாவில் நடிப்பை விட இயக்குநர் ‘சீட்’ முக்கியம் என்பது அவருக்குப் புரிந்தது. இதனால் நடிப்பில் இருந்து...
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, மிர்னா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதை அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சி சொன்ன லைன் பிடித்திருந்ததாகவும் முழுக் கதையையும் அவர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கமல்ஹாசனுடன் இணைந்து...









