Google search engine
நான் ​திரைப்​படங்​களுக்கு டப்​பிங் பேசிக் கொண்​டிருந்த காலத்​தில் எனக்கு ஏராள​மான நண்​பர்​கள் இருந்​தார்​கள். இப்​போதும் அந்த நட்​பு, அதே அன்​போடு தொடர்​கிறது. என்னை விட வயதில் மூத்​தவர்​கள், இளை​ய​வர்​கள் என பெரும் வட்​டம் அது. அப்​போது எனக்கு அறி​முக​மானவர்​களில் ஒரு​வர் வீரமணி. அவரை எங்​கு, எப்​போது முதன் முதலில் சந்​தித்​தேன் என்​பது தெரிய​வில்​லை. தென் மாவட்​டத்​துக்​கார​ரான அவர் எம்​.ஆர்​.​ரா​தாப்​பா​வின் நாடகக்​குழு​வில் இருந்​திருக்​கிறார். ராதா​ரவி அண்​ணன் குடும்​பத்​துக்கு மிக வேண்​டிய​வர். என் சகோ​தரி...
தான் மேடையில் பேசிய விவகாரத்துக்கு த்ரிஷா எதிர்வினையாற்றிய நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.   நடிகர் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நான் பேசியது உண்மையிலேயே தவறிதான் நடந்தது. நான் மேடையில் விஜய் குறித்தோ அஜித் குறித்தோ பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு ஒரு புகைப்படம் வந்தது. அதை பார்த்ததும் உண்மையிலேயே நான் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே...
பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்​டிஆர், ‘ஆர்​ஆர்​ஆர்’ படத்​துக்​குப் பிறகு பான் இந்​தியா நடிக​ராக மாறி​விட்​டார். இப்​போது பிர​சாந்த் நீல் இயக்​கும் ‘டி​ராகன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இந்​நிலை​யில் இவர் பெங்​களூரு மகாதேவபு​ரா​வில் கட்டப்பட்​டுள்ள கிம்ஸ் மருத்​து​வ​மனையைத் திறந்துவைக்க ஞாயிற்​றுக்​கிழமை வந்​தார். அவரைப்பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்​கள் கூடினர். அவர்​கள் மருத்​து​வ​மனைக்​குள்​ளும் புகுந்​தனர். இதனால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. பாது​காவலர்​கள், அவர்​களிடம் இருந்து ஜூனியர் என்டிஆரை மீட்டு அழைத்​துச் சென்​றனர். ரசிகர்​களைக் கட்​டுப் ​படுத்த...
பரத் நடித்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘காளிதாஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இதன் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில் இதையும் இயக்கியுள்ளார். இதில், பரத், புதுமுக நடிகர் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘பூவே உனக்காக’ சங்கீதா, கிஷோர், சுரேஷ் மேனன், பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கை பிக்​சர்​ஸ் சார்​பில் ஃபைவ் ஸ்டார் கே.செந்​தில் மற்​றும் டாக்​டர்...
நடன இயக்​குநர் ராபர்ட் நாயக​னாக நடிக்​கும் படம், ‘செவல காள’. விங்ஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​தின் கதை, திரைக்​கதை, வசனம் எழுதி அறி​முக இயக்​குநர் பால் சதீஷ் இயக்​கு​கிறார். இதில் நாயகி​யாக மீனாட்சி ஜெய்​ஸ்​வால் நடிக்​கிறார். சம்​பத் ராஜ், ஆர்​யன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். ஆக் ஷன் படமான இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்த நிலை​யில், காமெடி காட்​சிகளை இன்​னும் சேர்த்​தால் நன்றாக இருக்​கும் என்று படக்​குழு நினைத்​தது. இதையடுத்து இப்​போது தனி​யாக...
சத்யா சிவா இயக்கத்​தில், உறியடி விஜய்​கு​மார், கயல் ஆனந்தி நடிக்​கும் படம் ‘அறிவு’. மூவிட்​ரோன் நிறு​வனம் சார்​பில் சாய்​வினோத் ஜெயக்​கு​மார் தயாரிக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு பூஜை​யுடன் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் ஐ. எம்​.​விஜயன், சிங்​கம்​புலி, தீபா சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். டி.இ​மான் இசையமைக்​கிறார். ஒளிப்​ப​திவை தில் ராஜு மேற்​கொள்​கிறார். பெண் உரிமை​களை மைய​மாக கொண்டு வலு​வான சமூகச் செய்​தி​யுடன் உரு​வாக​வுள்ள இதன் படப்​பிடிப்பு இடுக்​கி, தேனி...
இன்று நடைபெறவிருந்த ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று (மார்ச்.9) மதியம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்கு வரவிருந்த மறுதணிக்கை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் புதிய தேதி விரைவில் தெரியவரும் எனத் தெரிகிறது....
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர். சமீபத்தில் விஜய்யின்...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு...
சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார். அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள்...