ஒளிப்பதிவுக்கான லென்ஸ் தேர்வே, ஒரு காட்சியின் மறைமொழியாக இருக்கிறது. சினிமா என்பது காட்சிகளின் தொடர்ச்சி, அது உணர்வுகளின் தீவிரமான பயணம்.
இந்தப் பயணத்தில் காட்சியின் ஒவ்வொரு தருணத்தையும் மனநிலையையும், தொனியையும், பார்வையாளர் எந்த உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவை கேமரா லென்ஸ்கள். ஒவ்வொரு லென்ஸும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மொழியைப் பேசுகிறது. அது காட்சியின் ஆழத்தையும், பரப்பையும், அளவையும் வடிவமைக்கும் மந்திரம்.
லென்ஸ்களின் வகைகள்: அழகியலும் உணர்ச்சியும் - ஸ்பெரிக்கல் லென்ஸ்கள் இயல்பான...
‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார்.
சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன....
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா.
இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும்...
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் கடந்த நவ.15 அன்று ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி...
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது...
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை இயக்குநர் ( ஆர்ட் டைரக்டர் ) தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா...
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் பேஸ்டில் கலர் (வெளிர் நிற) புடவைகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என்று வசீகரமாகக் காட்சியளித்த, அவரது க்ளிப்பிங்கள் இணையத்தில் வெளியாகின. அது நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க அதுவே தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
யார் இந்த கிரிஜா ஓக்? ‘வெளிர் நீலம், வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை என அழகிய...
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பேஷன்...
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப்...
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார்.
‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ‘அனிமல்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள படம், பிரபாஸ் நாயகன் என்பதே இதற்கு காரணம்.
இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக...








