விஷால் நடித்த ‘செல்லமே’, தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய, காந்தி கிருஷ்ணா இப்போது இயக்கியுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. புதுமுகங்கள் ராணவ், ரோஸ்லின், க்ரித்திக் மோகன், அமிதா ரங்கநாதன் மற்றும் அர்ச்சனா, சம்பத்ராம், ரவிமரியா நடித்துள்ளனர்.
பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஏப்.24-ல் வெளியாகும் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகை...
விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. டைம் டிராவல் கதையான இதன் விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக அமெரிக்கா சென்று வந்தனர். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பு தரப்பில் அதைக் குறைக்கச் சொன்னதாகக் கூறப்பட்டது.
சிவகார்த்திகேயன் அடுத்து ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் டிராப் எனக்...
ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. ‘ரஜினி 173’ படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் படத்தின் கதை, திரைக் கதையினை இறுதி செய்து பணிகளைத் தொடங்கினார்.
ஆனால், முன்பு ஒப்புக் கொண்ட தெலுங்கு படத்தினை இயக்குவதற்காக வாங்கப்பட்ட தொகையினை அளிப்பதில் சிக்கல் உருவானது. இதனால் ‘ரஜினி 173’ படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்க முடியாத சூழல் உருவாகி...
அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம்,‘மகா அவதார் நரசிம்மா’. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில், மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸை ஹோம்பாளே பிலிம்ஸ் அறிவித்தது.
கே.ஜி.எஃப். காந்தாரா, சலார் போன்ற மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த நிறுவனம் இது. அதன்படி இந்நிறுவனம் 10 அவதாரங்களில் 2-வது அவதாரமாக ‘மகா அவதார் பரசுராம்’ படம் பற்றி...
நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி, மாணவர்கள் அணி ஒருங்கிணைத்து நடத்திய இளைஞர் கலை விழா நேற்று நடைபெற்றது.
அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல்...
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தில் ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், கதிர், கயாது லோஹர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கரின் 40-வது படமான இந்த த்ரில்லர் படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
துல்கர் சல்மான் தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன்...
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு இயக்கும் இப்படத்தில் ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நாயகியாக நடிக்கிறார்.
பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இதை, ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. சாகர் சந்தேஷ் - ஜி.திம்மா ரெட்டி...
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உள்பட பலர் நடித்து 2014-ல் வெளியான திரைப்படம், ‘குற்றம் கடிதல்’. இந்தப் படத்தின் அடுத்த பாகம் இப்போது ‘குற்றம் கடிதல் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஜீவா இயக்கியுள்ளார்.
இதில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
ஆர்.பன்னீர் செல்வம் இயக்குநராக அறிமுகமான திரைப்படம், ‘ரேனிகுண்டா’. ஜானி, சனுஷா, நிஷாந்த், சந்தீப், தமிழ், தீப்பெட்டி கணேசன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்தார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் 2-ம் பாகம் `ரேனிகுண்டா 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
பன்னீர்செல்வம் இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள், இதிலும் நடிக்கின்றனர். ஷாலினி நிவாஸ் கதாநாயகியாக...
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `கர' படம் ஏப்.30ம் தேதி வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்தார்.
தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் நடித்த கன்னட நடிகையான ருக்மணி வசந்த், ‘மதராஸி’யில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். ‘காந்தாரா சாப்டர் - 1’ படம் மூலம் பிரபலமானார். அடுத்து,...









