சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு படத்தைப் பற்றி பேசும்போது...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் 'காந்தா' என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதை உறுதி செய்து, சன் பிக்சர்ஸ் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 25 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் , நீல நிற சேலை அணிந்து, கையில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் வித்யா பாலன் இறங்கி வருகிறார்."இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது" என்ற வசனத்துடன்...
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அக். 2-ல் வெளியாகிறது.
இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் தாணு, தமிழ்க்குமரன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், நடிகர்கள் சூரி, விக்ராந்த், சஞ்சீவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சூரி பேசும்போது, “சஞ்சய் இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் ஜெயிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்து...
கிடுகு, கந்தன் மலை ஆகிய படங்களை இயக்கிய வீரமுருகன் அடுத்து இயக்கும் படம், ‘பனங்காட்டான்’.
ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.என், இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி வீரமுருகன் கூறும்போது, “இது தென் மாவட்டத்தில்...
ஹிப் ஹாப் ஆதி, இயக்கி, நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத்கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் செப்.25-ல் வெளியாகிறது.
இப்படம் பற்றி ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறும்போது,...
விஜய் – த்ரிஷா நடித்து 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திருப்பாச்சி’. பேரரசு இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.1-ம் தேதி மீண்டும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விஜய்- த்ரிஷா நடித்த ‘கில்லி’ மறுவெளியீட்டிலும் வசூல் சாதனைப் படைத்ததால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இதன் மறுவெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’...
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடக்கும் வரலாற்று ஆக் ஷன் டிராமாவாக ‘டேவிட் ரெட்டி’ என்ற திரைப்படம் உருவாகிறது. 1897 முதல் 1920-கள் வரையிலான காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், மோகன் பாபுவின் மகன் மனோஜ் மன்சு நாயகனாக நடிக்கிறார். உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். ஹனுமா ரெட்டி இயக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகி வருகிறது.
வெல்வட் சோல் மோஷன் பிக்சர்ஸ்...
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50-வது படமான இது, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் ஓடிடி-யிலும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப்படம் அங்கும்...
அஜித்குமார் அடுத்து நடிக்க இருக்கும் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித்குமார், அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ‘ஏகே 64’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு...
‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் 3-ம் பாகத்தை 4 வார காலத்துக்கு வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இதன் 2-ம் பாகத்தின் இணை தயாரிப்பாளரான ஏ.விஜயசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி...









