திரைப்படத் துறையில் இருந்து வந்து, தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளையும் எதிர்த்து தனி ஆளாக விஜய் வெற்றி பெற்றதை பார்க்கும்போது ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்தான் ஏற்பட்டது. விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில்...
நடிகர் விக்ரம் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நாயகியாக ரியா ஷிபு நடிக்கிறார். பிரம்மாண்ட ஆக் ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் மூணாறு சென்றுள்ள நடிகர் விக்ரம் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைச் சந்தித்தார். அவர்கள் விக்ரம் நடித்த திரைப்படங்களில் தங்களுக்குப் பிடித்தது பற்றி அவரிடம் பேசினர்.
பின்னர் அவர்களுடன் இணைந்து ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற,...
‘அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி’ போன்ற படங்களை இயக்கியவெற்றிவீரன் மகாலிங்கம் அடுத்து இயக்கும் படம் ‘பூ காய் கனி’. ஒரு புளியமரத்தின் கதை என்று கேப்ஷன் வைத்துள்ளனர்.
கேசிபி மிதுன் சக்கரவர்த்தி, நடிகர் கொட்டாச்சி மகள் மானசி, நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சந்தோஷ் நம்பி ராஜன், ராஜூ மகாலிங்கம் உள்பட பலர் நடிக்கின்றனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார்.
ஜேஎஸ்ஏ...
தமிழில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘96’, ‘மெய்யழகன்’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் ஃபகத் பாசில். ஆனால், அதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதனை மேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
தற்போது இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும்...
தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அங்கீகாரம்’. ஜேபி. தென்பாதியான் இயக்கும் இதில், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் - அஜித் பாஸ்கர் - அருண் முருகன் இணைந்து தயாரிக்கின்றனர். இதில், ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் டிரெய்லர் வெளியாகி பாராட்டுப் பெற்று வருகிறது.
“தடகள விளையாட்டை மையமாகக்...
நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தபோது தனது ஈகோ உடைந்த தருணத்தை அனுபவப் பகிர்வாகப் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ளது ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' (Art of Living) சர்வதேச மையம். இந்த ஆன்மிக மையத்தில் 45-வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாளை...
‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து இயக்கியுள்ள படம் ‘டிசி’. இதில் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கேரக்டரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த கேங்ஸ்டர் டிராமா படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபியும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் புரமோஷன் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது....
இந்தியாவில் நவீன ஓவிய முன்னோடியாகக் கருதப்படுபவர் அம்ரிதா ஷெர்-கில். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இவரது தந்தை, உம்ராவ் சிங் ஷெர்-கில் சீக்கியர். தாய் ஹங்கேரியை சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் மேற்கத்திய பாணியில் ஓவியங்களை வரைந்து வந்த அம்ரிதா ஷெர்-கில், 1934-ல் இந்தியா திரும்பிய பிறகு இந்தியக் கலைகளின் மீது, குறிப்பாக அஜந்தா மற்றும் முகலாயக் கலைகளால் ஈர்க்கப்பட்டார். அம்ரிதாவின் ஓவியங்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், கிராமப் புற...
’ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால்...
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற உடன் இன்று கல்வி நிலையங்கள், ஆலயங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “தமிழக...









