‘அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’, ‘விசிறி’ போன்ற படங்களை இயக்கியவெற்றிவீரன் மகாலிங்கம் அடுத்து இயக்கும் படம் ‘பூ காய் கனி’. ஒரு புளியமரத்தின் கதை என்று கேப்ஷன் வைத்துள்ளனர்.
கேசிபி மிதுன் சக்கரவர்த்தி, நடிகர் கொட்டாச்சி மகள் மானசி, நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சந்தோஷ் நம்பி ராஜன், ராஜூ மகாலிங்கம் உள்பட பலர் நடிக்கின்றனர். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார்.
ஜேஎஸ்ஏ புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜமால் சாஹிப் வழங்கும் இப்படத்தை ராஜேஸ்வரி வெற்றி வீரன் தயாரிக்கிறார். 1986 கால கட்டப் பின்னணியில் நடக்கும் கிராமத்து காதல் கதையை கொண்டது இது.















