அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அருள்நிதி நடித்துள்ள ‘டிமாண்ட்டி காலனி 3’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அஜய்...
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘பரிமளா & கோ’. இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது: “இப்படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு ‘பரிமளா ஃபேமிலி’ என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம்....
ஒய்.ஜி.மகேந்திரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்துள்ளார்.
இ5 என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜே. ஜெயகிருஷ்ணன் வெளியிடுகிறார். ஒய்.ஜி.மகேந்திரா இதே பெயரில் நடத்திய நாடகத்தைத் திரைப்படமாக்கி உள்ளனர்.
“இப்படம்,...
ஜூன் 26-ம் தேதி ’கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்...
‘கருப்பு’ படத்தின் வெற்றி குறித்து ஜோதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மே 15-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ வெளியானது. இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடித்த படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருப்பதால் ஜோதிகா பெரும் உற்சாகமாகி இருக்கிறார்.
இது குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில், “‘கருப்பு’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எங்களுக்கு...
“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சமூக நீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும்...
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஜி.டி.நாயுடு’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வந்த படம் ‘ஜி.டி.நாயுடு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இதன் தமிழக உரிமையினை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார்...
விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்துக்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘நூறு சாமி’ படத்தை முடித்துவிட்டு, மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசை மற்றும் எடிட்டிங் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று தயாரித்தும் வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில்...
‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப் படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தைக் கடந்த ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இதை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பாராட்டைப் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாகத் திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துகளை வலியுறுத்தி அப்படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்க, ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “பெருமை வாய்ந்த நமது தமிழ்ப் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக...
பிரபுதேவா- வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ‘பேங் பேங்’. இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். இதை, கேர்ஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார்.
பப்லு பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேணு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி...









