ஹிப் ஹாப் தமிழா எழுதி இயக்கும் ‘மீசைய முறுக்கு-2’ படத்தில் கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே.ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் சார்பில் ஏ.சி.எஸ் அருண் குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் டைட்டில்...
புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம், மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை மே 16 அன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில்...
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து 7 நாட்கள் வரையும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை, வார இறுதி நாட்களிலும் (சனி, ஞாயிறு) தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் தற்போது தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் பண்டிகை அல்லது பொது...
நடிகர் கார்த்தி, சர்தார் 2, தமிழ் இயக்கும் மார்ஷல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
இந்நிறுவனம், தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. கார்த்தியின் 30-வது படமான இதை கல்யாண் சங்கர் இயக்குகிறார்.
இவர், தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற மேட்,...
‘கருப்பு’ பண்ணலாம் என்ற முடிவை எடுக்க வைத்த கருப்பசாமிக்கு நன்றி என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அத்துடன், கருப்பசாமி பாடல் உருவானதன் பின்புலம் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
தமிழகம் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘கருப்பு’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழகம் முழுக்க திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகிறார். நீண்ட இடைவெளி கழித்து கிடைத்துள்ள இந்த பிரம்மாண்டமான வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார்...
ஜனநாயகன் தயாரிப்பாளரான கே.வி.என் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே.நாராயணா, திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, “’ஜனநாயகன்’ பற்றிப் பேசுவதற்கான இடம் இதுவல்ல. நான் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். ஆனால் ஏற்கெனவே சொன்னது போல, தணிக்கைச் சான்றிதழ் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் படத்தை கூடிய விரைவில் வெளியிடுவோம்.
தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததும்...
அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கியுள்ள திரைப்படத்துக்கு ‘பாதாம்கீர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் சிவகுமார், ஆன் ஷீத்தல் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரொமான்டிக் காமெடி படமான இதை லார்ட்ஸ் பி தி இன்டர் நேஷனல் புரொடக் ஷன்ஸ்...
சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம், ‘கருப்பு’. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.
இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் சூர்யா.
அப்போது அவர் கூறியதாவது: ‘கருப்பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்ணினேன், இதில் நடிக்கலாம் என்று. வேறு எந்தப் படத்தையும்...
“அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமல்ல; முதல்வரும் புதியவர் தானே” – விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா பதிலடி
admin - 0
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத் துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து தெரிவித்த கருத்துக்கு பதிலடி தந்துள்ள நடிகர் கிருஷ்ணா, “நம் முதல்வரும் புதியவர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில், “விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால்...
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் புதிய அமைச்சரவை, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கூட்டணி அமைச்சரவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும்...









