ஹிப் ஹாப் தமிழா எழுதி இயக்கும் ‘மீசைய முறுக்கு-2’ படத்தில் கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே.ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் சார்பில் ஏ.சி.எஸ் அருண் குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் டைட்டில் டீஸர்- ஃபர்ஸ்ட் லுக் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து’ எனும் பாடல் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. இப்பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘பப்பாளி பழமே’, ‘கோவிந்தம்மா’ உள்ளிட்ட பாடல்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.















