அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை வைத்து அவர் படப்பிடிப்பு எப்போது தான் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதனை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், தயாரிப்பாளர் யார் என்ற கேள்விகளுக்கு இப்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது.
இன்று (மார்ச் 15)...
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி பேட்டிகள் அளித்துள்ளார். அதில் தனது தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நஷ்டத்தையே ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “நான் தயாரித்த படங்கள்...
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிக்காக பல்வேறு படக்குழுவினர் காத்திருந்தனர். அந்த தேதியினை வைத்து தங்களுடைய படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது ஏப்ரல் 23-ம் தேதி தேர்தலும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4-ம் தேதிக்கு பிறகு தங்களுடைய படத்தினை எப்போது வெளியிடலாம்...
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் இப்படத்துக்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.நாகார்ஜுன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
27 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களிலும் பொள்ளாச்சி...
நடிகர் மாதவன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இப்போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரோஹன்மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு தனது பெயரையும், தனது குழுவின் பெயரையும் பயன்படுத்தி பொதுமக்களிடம் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த...
கமல் ஹாசனின் ‘மகாநதி’ திரைப்படம் குறித்து ஒருமுறை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தேன். அப்போது அழைத்திருந்த ஒரு மூத்த நண்பர், ‘மகாநதி படம் வந்தபோது நான் கல்லூரி மாணவன். என் நண்பர்களிடத்தில் கூறினேன்... இந்தப் படம் எப்படி போகுமெனத் தெரியாது. ஆனால், இப்போது பால்யத்தில் இருக்கும் தலைமுறை முப்பது வருடங்கள் கழித்து இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்’ என்று கூறினேன் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார் நண்பர்.
பல நாட்கள் கழித்து திடீரென அந்த...
தென்னிந்திய நடிகர் சங்க விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இவர்களின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்தும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும், சங்க உறுப்பினரான நம்பிராஜன்...
அந்த பிம்பத்தை உடைத்து, போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும்.
ஈரானியப் படங்களில் அதிகாரத்தை நேரடியாக எதிர்க்க முடியாதபோது, குழந்தைகளின் உலகம் மற்றும் குடும்ப உறவுகள் வழியாகப் பெரிய அரசியலைப் பேசுவார்கள்....
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி வெளியான நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடிகர் விஜய் கலந்து கொண்டது சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த த்ரிஷாவிடம், விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் ஏதும்...
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவுக்கும் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துக் கோரி மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. விவாகரத்து பெற்றாலும் கணவரிடம்...










