நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம்...
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ் நடித்த புதிய வானம் உள்பட சில படங்களை தயாரித்துள்ளார்.
சத்யராஜ், நதியா நடித்த மந்திரப்புன்னகை (1986), ஆனந்த், திவ்யபாரதி நடித்த நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக இவர் பிப்.14...
தெலுங்கு மாஸ் மசாலா படங்கள் மீது தமிழ்ப் பார்வையாளர்களுக்கு எப்போதும் பெரிய மரியாதை இருந்ததில்லை. மாறாக, எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்கள், ‘புஷ்பா’ போன்ற நேர்த்தியான மசாலா படங்களை இங்கே ஓட வைப்பார்கள். தமிழ் மசாலா படங்கள் மீதான இதே பார்வை மற்ற மூன்று மாநில ரசிகர்களுக்கு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. பிறகு தென்னிந்திய வெகுஜன சினிமாவின் தரத்தை எந்த மாதிரியான படங்கள் உயர்த்தும் என்று தேடினால், அவைதான் மிடில் சினிமாக்கள். மசாலா...
“தேவை என்று வரும்போது கேட்பதற்கு கூச்சப்படக் கூடாது” என்று மாணவர்களுக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அறிவுரை வழங்கினார்.
சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ”எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நிகழ்ச்சியில் ஆடுவது 10-20 பேர் மட்டுமே, ஆனால் பார்வையாளர்கள்தான் அதிகம்.
கலை விழா...
“தமிழ் திரையுலகம் உள்ளடக்கத்திலும் சரி, தொழில்நுட்பரீதியாகவும் சரி, எல்லா வகையிலும் இந்தியாவுக்கே ஒரு டிரெண்ட்செட்டர் ஆக விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.13) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில் அவர் பேசியதாவது: “இந்தியாவிலேயே மிகவும் துடிப்பான துறை...
தமிழக அரசின் சார்பில் 2016 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான திரைப் பட விருதுகள், 2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் 2021-22-ம் கல்வி ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன.
விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி...
தெலுங்கு நடிகர் நானி நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. காந்த் ஒடேலா இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சி.சாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 8 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்காக நானியின் அறிமுக பாடல், ஹைதராபாத் அருகே தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின்...
இந்தியில் உருவான ஹாரர் த்ரில்லர் படம், ‘ராகினி எம்எம்எஸ்’. காமெடியுடன் கூடிய இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கு ‘ராகினி 3' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சாஹிர் ராசா இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது ஷஷாங்கா கோஷ் இயக்குவார்...
சினிமாவில், பார்வையாளரின் இதயத்தோடு நேரடியாக இணைக்கும் பாலம் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டுகள். பிரம்மாண்ட திரையில், ஒரு மனித முகம் மட்டும் ஆக்கிரமித்திருக்கும் அந்த சில நொடிகள், ஆயிரம் பக்கவசனங்கள் சொல்லாத உண்மைகளைச் சொல்லிவிடும். இது பார்வையாளரை கதாபாத்திரத்தின் அகவுலகத்துக்குள் அழைத்துச் செல்லும் உணர்ச்சிப் பாலம்.
க்ளோஸ்-அப்பின் வரையறை: சூழலில் இருந்து மனநிலைக்கு: தொழில்நுட்ப ரீதியாக, தோள்பட்டைக்கு மேல் முகம் மட்டும் தெரியும் காட்சியே க்ளோஸ்-அப் எனப்படும். ஆனால், கலைரீதியாக இது ‘சூழலைத் துண்டித்து...
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
பிப்.27-ல் வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன்,...








