விஷ்ணு விஷால், ஐஸ்​வர்யா லட்​சுமி, கருணாஸ், முனீஸ்​காந்த், காளி வெங்​கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’. செல்லா அய்​யாவு இயக்​கிய இப்​படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் மற்​றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ளது. கடந்த 3ம் தேதி வெளி​யான இப்படம் வெற்​றிகர​மாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழுவினர் கலந்து கொண்​டனர். நடிகர் விஷ்ணு விஷால்...
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்​பகலில் பூச்​சி​முரு​க​னுக்கு திடீரென தலைச்​சுற்​றல் ஏற்​பட்டு...
தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​துக்கு தணிக்​கைச் சான்​றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில் தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இதையடுத்து இப்​படம் ஜூலை 24-ல் வெளி​யாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநி​யோக நிறு​வன​மான யார்க்...
யோகி பாபு நடித்துள்ள 300-வது திரைப்படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 17-ல் வெளியாகிறது. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி தயாரித்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்...
போதிய கவனம் பெறாத, அதே​நேரம் அதைப் பற்றி சற்​றும் கவலைப்​ப​டா​மல், தான் தேர்ந்​தெடுத்த துறை​யில் உழைத்​துக் கொண்​டிருந்​தவர்​களில் ஒரு​வர் ஒளிப்​ப​தி​வாளர் ​- இயக்​குநர் செழியன். திரைபடக் கலை, ஒளிப்​படக் கலை, இசை, எழுத்து எனப் பன்​முகத் திறமை வாய்ந்​தவர். கடந்த மே மாதம் ஒரு திரை​யிடலுக்​குச் சென்றிருந்​த​போது, நெடு நாள் கழித்து அவரை சந்​தித்​துப் பேசும் வாய்ப்பு கிடைத்​தது. 2 மாதங்​கள் கூடக் கடந்​தி​ராத நிலை​யில் நேற்று அவர் கால​மாகி​விட்​ட​தாக...
தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முரளி நடிப்பில் வெளியான ‘இதயம்’ திரைப்படம்தான். சொல்லாத காதலின் வலியை பேசிய அந்த திரைப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதைக்களத்தில் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ள படம்தான் ‘இதயம் முரளி’. திருச்சியில் தன் மாமாவுடன் (நட்டி) வளரும் இதயாவின் (அதர்வா) வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் காதல்கள் அதை சொல்ல...
யூடியூப்​பில் பிரபல​மாகி, படம் இயக்க வருபவர்​களின் எண்ணிக்கை இப்​போது அதி​கரித்து வரு​கிறது. அந்த லிஸ்ட்​டில் புதி​தாக இணைந்​திருக்​கிறார் நிரஞ்​ஜன். ‘மிஸ்​டர் பாரத்’ படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகும் அவருக்கு இயல்​பாகவே வருகிறது காமெடி. இதில், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்​.சுந்​தர் ராஜன், லிங்கா என பலர் நடித்துள்​ளனர். பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்கு​வாட், தி ரூட் நிறுவனங்​கள் சார்​பாக சுதன் சுந்​தரம், லோகேஷ் கனக​ராஜ்,...
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக...
திரை​யில் காணும் ஒவ்​வொரு ஃபிரே​முக்​கும் பின்​னால் இயக்​குநரின் கற்​பனை, ஒளிப்​ப​தி​வாளரின் பார்​வை, கலை இயக்​குநரின் வடிவ​மைப்பு ஒன்​றிணைந்து செயல்​படு​கின்​றன. ஒரு கதையை வார்த்​தைகளால் மட்​டுமல்​லாமல், ஒளி, நிறம், அமைப்​பு, பின்​னணி மற்​றும் இடவெளி ஆகிய​வற்​றின் மூலம் பார்​வை​யாளரின் மனதில் பதிய வைப்​பதே இவர்​களது பணி. திரைக்​குப் பின்: ஒளிப்​ப​தி​வாளர், கலை இயக்​குநரின் கூட்​டுப்​படைப்பு ஒளிப்​ப​தி​வாளர் கேம​ரா, லென்​ஸ், ஒளியமைப்பு மற்​றும் காட்​சி​யின் உணர்​வுத் தன்​மையை நிர்​ண​யிக்​கிறார். கலை இயக்​குநர் கேம​ரா​வின் முன்​னால் இருக்​கும்...
இந்தியாவில் இருந்து ஃபார்முலா கார் பந்தயங்களின் முகமாக அறியப்பட்டவர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த நரேன் கார்த்திகேயன். இன்று அவரே வியக்கும் அளவுக்கு ஃபார்முலா கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் ஒருவர் உண்டென்றால் அவர்தான், தன்னுடைய ரசிகர்களால் ‘தல’ என்று அன்பாகவும் பல நேரங்களில் வெறித்தனமாகவும் அழைக்கப்படும் அஜித். இன்று விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராகிவிட்டார். அதனால் அவர் இனி நடிக்கப் போவதில்லை என்று முன்னதாகவே...