சிவகார்த்திகேயனை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார்.
‘ரஜினி173’ படத்தின் இயக்குநர் ராம்குமார் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால் அவரது அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி படத்துக்கு முன்பாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்க படம் ஒன்று பூஜை போடப்பட்டது. ஆனால், அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் அப்படியே இருக்கிறது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருந்த சிபி சக்கரவர்த்தி இப்போது ரஜினி படத்தை...
‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியீடு என்ற கேள்விக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதிலளித்துள்ளார்.
நீண்ட மாதங்கள் கழித்து கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்தப் படம் குறித்த கேள்விக்கு, “அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில்...
முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவில் ரவி மோகன் பேசும்போது, “பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட...
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்ய தேதியை நிர்ணயித்தாலும், சட்டப்படியே செல்ல முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்துக்கான அனைத்து...
வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற அந்த படத்தின் நாயகன் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நடிகர் ரவி மோகன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரவி மோகன் கூறியுள்ளதாவது: “தளபதி வெற்றி கொண்டான். ஜனநாயகன் பட ட்ரெய்லரில் அண்ணன் விஜய்யின் பாத்திரம் யதார்த்தமானதாக உள்ளது. இந்தப் படம்...
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளி சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. வரும் ஜன.10 அன்று வெளியாகும் இப்படத்தின்...
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல்...
சபரி, ரோகித் , ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, பி.எல்.தேனப்பன் என பலர் நடித்துள்ள படம், "99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு". மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி எழுதி, இயக்கி, இசை அமைத்து, தயாரித்துள்ளார். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்பட பலர்...
சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. அந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்தப் படத்தின் அடுத்த பாகமாக ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உருவாகி வருகிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்தைத் தயாரித்த...
‘ஜனநாயகன்’ படத்துக்கு போட்டியாக ‘பராசக்தி’ வெளியாக இருப்பது தொடர்பாக இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார்.
பின்பு ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியாவது குறித்து பேசும் போது சிவகார்த்திகேயன், “இப்போது ரிலீஸ் விஷயங்களுக்கு...
