தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.
தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி...
பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர்...
“ஜி.டி.என் பயோபிக்கில் பெரியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன்..!” – இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் பேட்டி
admin - 0
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கான ‘ஜி.டி.என்’ ஆக.7-ல் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்கிற கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார்.
‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் பற்றி இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமாரிடம் பேசினோம்.
ஜி.டி.நாயுடு பயோபிக்...
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனிருத், “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களின் மூலம் உங்களுடன் பயணித்த இந்த நினைவுகூரத்தக்கப் பயணம் மிகவும் அற்புதமான, உணர்ச்சிகரமான ஒன்றாகும்....
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம், ‘வாணவேடிக்கை’. இதை திரு இயக்குகிறார்.
இவர், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிக்கும் இப்படத்துக்கு அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் டாக்டர்...
இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்கு’. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்...
தமிழில் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை அனுமோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தனிமையில் வாழ்வது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்றியடையவில்லை. அதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. சில உறவுகள் இயல்பாக நீடிக்காது. அது...
‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது “‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதை விட தகுதியான பல படங்கள் நிறைய இருக்கிறது.
அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான்...
இந்தியில் 2009-ம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். இசைக் கலைஞருமான அவர் பாடல்களும் பாடி வருகிறார். தனி ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். நடிகையாக 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதி ஹாசன, அந்தப் பயணம் பற்றி பேசியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் பயணம் எனக்கு என்னைப் பற்றியும், என்...
காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோவாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும் படத்தில் பணியாற்றியவர்.
சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கபில் கூறும்போது, “இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. காதலை...









