இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும், நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்தின் ராமர் அறிமுக டீசர் வீடியோ இன்று வெளியானது.
டீசர் எப்படி? - டீசரின் தொடக்கத்தில் ‘இது நம் வரலாறு, நம் உண்மை’ என்ற கேப்ஷன்கள் வருகின்றன. காட்சிகள் நவீன சிஜிஐ தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாட்டால் சற்று செயற்கையாகத் தெரிந்தாலும், ராமராக ரன்பீர் கபூர் திரையில் தோன்றியவுடன் டீசரின் டோன் மாறுகிறது.
பாலகாண்டம் முதல் ஆரண்ய காண்டம் வரையிலான...
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம், ‘யூத்’. இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
பள்ளிக்கூடப் பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 19-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது....
சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குள்ள’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ஆகும்.
அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இதன் பாடல் வரிகளை, கானா சல்லு எழுதியுள்ளார். விஹாஸ் நாகராஜ் இயக்கி இருக்கிறார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீஜே...
சத்யஜோதி நிறுவனத்தின் படத்துக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைக்கவுள்ளார் இளையராஜா.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், யார் இசையமைப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’,...
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘லீடர்’. ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்போது, “ஓர் அப்பாவி அப்பாவும் மகளும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் கேங்ஸ்டர் கும்பல் நுழைகிறது, பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய தலைமுறையினருக்குப் பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் அவர்...
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம், ‘யூத்’. இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
பள்ளிக்கூடப் பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 19-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது....
“ஜி.வி. பிரகாஷ் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியான படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படத்தினை கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை புரிந்தது. தற்போது நல்ல வசூல் செய்து வருவதால் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது...
ஒலியும் ஒளியும் இணைந்து பார்வையாளர்களின் ஆழ்மனதோடு நிகழ்த்தும் உரையாடலே திரைப்படங்கள். ஒளிப்பதிவாளரின் கோணமும், இசையமைப் பாளரின் ராகமும் இணையும் புள்ளியில் ஒரு காட்சியின் ஆன்மா பிறக்கிறது.
நீண்ட ஷாட்களும் இசையின் சுவாசமும்
ஒளிப்பதிவு ஒரு கதையைச் சொல்லும் ‘உடல்’ என்றால், பின்னணி இசை மற்றும் பாடல்கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்கும் ‘ஆன்மா’ போன்றது. காட்சியில் வெட்டுகள் குறைவாக இருந்து, கேமரா நீண்ட நேரம் ஒருவரை அல்லது ஒரு சூழலைப் பின்தொடரும்போது...
என்னை தவிக்க விட்டுச் சென்ற நிழல்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 26
admin - 0
சென்னை நசரத்பேட்டையில் வீடு கட்டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எனக்கு அங்கு அறிமுகமானவன் அந்தப் பகுதி வார்டு மெம்பராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழுமலை. அன்றிலிருந்து என்னை அடிக்கடி ‘நைனா’என்று அழைக்க ஆரம்பித்தான்.
நான் எங்கு போனாலும் என்னை நிழலாகத் தொடர்ந்தான். ராமானுஜரின் தீவிர பக்தன். இருவரும் பல கோயில்களுக்கு ஒன்றாக சென்றிருக்கிறோம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு விழுப்புரம் அருகே உள்ள...
‘மதராஸி’ படத்தின் தோல்வியை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மதராஸி’. கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியை தழுவியது.
இதனிடையே, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தில் ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர்,...










