இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட...
தனது சாதியைக் குறிப்பிட்டு பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இப்படத்தின் விழாவில் பேசும்போது, “நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பலரும் பார்த்திபனை கடுமையாக சாடினர்....
சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்த படம் ‘நூறு சாமி’. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சசி – விஜய் ஆண்டனி...
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.
தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தப் படத்தில் முருகன்...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம், ‘அரசன்’. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலைப் புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றது.
அதில் சிலம்பரசன், ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரர்களுக்கான உடை அணிந்து நடித்திருந்தார். இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது....
செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டார். இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவுசல்யா, மைம் கோபி, லிர்த்திகா, குஷி ரவி, சதீஷ் ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட...
சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘அரசன்’.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தாலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளை சுமார் 35 நாட்கள் காட்சிப்ப்டுத்த திட்டமிட்டுள்ளது...
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்து திரும்பியவுடன் மதுரையில் தொடங்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது....
ரவி மோகன் நடித்த ‘தாம் தூம்’ திரைப்படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்போடு வரும் ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தி நடிகை கங்கனா...
ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘எய்தவன்’ சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். இதை எஸ்எஸ்டி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். புலனாய்வு க்ரைம் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருத்தணியில் நடக்க இருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குநர் சக்தி ராஜசேகரன் கூறும்போது, “இது த்ரில்லர் படம் என்றாலும் இதுவரை பார்க்காத வகையில் இருக்கும். ஹோம் கார்டு பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோம் கார்டாக இருக்கும் ஒருவர் எப்படி...










