பிப்.13-ம் தேதி வெளியாகிறது சசிகுமாரின் ‘மை லார்ட்’!

0
172

ராஜுமுருகன் – சசிகுமார் இணைப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் இப்படம் தயாராகியுள்ளது. இதனை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இதன் தமிழக உரிமையினை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here