Google search engine
திருப்பதி ஏழுமலையானை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர் இரவு திருமலையில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மருமகன்கள் பேரன்கள், உறவினர்கள்...
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. டிசம்பர் 5-ம் தேதி வெளியீடாக இருந்த இப்படம், டிசம்பர் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அந்த தேதியிலும் இப்படம் வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், டிசம்பர் 18-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு தடைக் கோரி சென்னை உயர்...
ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி வரும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. ஃபேன்டஸி, ஆக்‌ஷன், டிராமா, ஹாரர்,...
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வரும் டிச.15 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டிசோசா ஆகியோர் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். சத்யா...
‘சூர்யா 47’ படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பல்வேறு உரிமைகள் விற்பனையாகி விட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை...
கடனை திரும்ப செலுத்தும் வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா...
நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே தான் தூங்குவதாக அண்மையில் பாலிவுட் சினிமா நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தெரிவித்தார். இது பேசுபொருளாகி உள்ளது. “எனக்கு தூங்குவது ரொம்பவும் பிடிக்கும். நாம் அதிகம் நேசிப்பவர்கள் தூங்க செய்ய வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். தூக்கத்தில் இருக்கும் ஒருவரை எழுப்புபவர் எதிரிக்கும் சமம். விடுமுறையை கொண்டாடுவதற்கு முன்பு நல்ல தூக்கம் தேவை. இதை நான் எல்லோருக்கும் அறிவுரையாக சொல்வேன். நான் எப்போதும் எனது...
பிரதீப் ரங்கநாதன்ன் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டியூட்’ மற்றும் ‘எல்ஐகே’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக தங்களது வெளியீட்டை தள்ளிவைப்பதாக ‘எல்ஐகே’ படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதி ‘எல்ஐகே’ வெளியாகும் என பாடல்களும் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘எல்ஐகே’ படத்தின் வேலைகள் முடிவடைந்தாலும், சரியான திரையரங்குகள் கிடைக்காது என படக்குழு கருதுகிறது....
“மற்ற திரையுலகினரைப் போல, தமிழிலும் புதிதாக முயற்சிக்க வேண்டும்” என்று நடிகர் கார்த்தி தனது பேச்சில் குறிப்பிட்டார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன், பிரபலங்களும்...
வெற்றிமாறன் – சிம்பு இணையும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ‘அரசன்’ படப்பிடிப்பு முதலில் நவம்பரில் துவங்குவதாக இருந்தது. அப்போது வேல்ஸ் நிறுவனம் – சிம்பு...