முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீடு குறித்து லைகா புரொடெக்ஷன்ஸ், ஜேசன் சஞ்சய் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், ‘அக்டோபர் 2-ம் தேதி கொள்ளைக்கான நாளாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று ‘சிக்மா’ திரையரங்குகளில் ஜொலிக்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக...
‘ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்’ என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறுகையில், ‘இந்த 21 வயதில் நான் பல விஷயங்களை சாதித்திருப்பதாக சொன்னீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இன்று நான் அடைந்திருக்கும் அனைத்தும் கடவுளின் ஆசிர்வாததால் கிடைத்தது. பலரின் அன்பும், ஒத்துழைப்பு இந்தப் பயணத்துக்கு துணையாக இருந்துள்ளது. கடவுளின் அருளால் எனது...
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது எக்ஸ்...
ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ படத்தின் பெயர் தணிக்கைக்குப் பின்பு ‘ராம் AND லீலா’ என மாற்றப்பட்டுள்ளது.
‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ‘ராம் IN லீலா’ படத்தில் நடித்து வந்தார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வர்திகா ஜெயின் நாயகியாக நடித்துள்ளார்.
ராமசந்திரன் கண்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, அன்கிட்...
“தென்னிந்திய திரையுலகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்தது” – பிரசாத் லேப் சிவராமனுக்கு கமல் புகழஞ்சலி
admin - 0
‘தென்னிந்திய திரையுலகம் அதன் உறுதியான தூண்களில் ஒன்றை இழந்து விட்டது’ என பிரசாத் லேப்ஸ் தொழில்நுட்ப தலைவர் சிவராமன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், ஏவிட் (Avid), டிஜிட்டல் சினிமா என காலம்தோறும் பல்வேறு மாற்றங்களின் ஊடாக சினிமா வளர்ந்து வந்துள்ளது. இந்த மாற்றங்களில் எல்லாம் முக்கிய பங்கு வகித்த, பிரசாத்...
சிம்புவின் புதிய படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, ‘ட்யூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. இதன் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
முதலில் இப்படத்தை ‘ட்யூட்’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது....
“ஒவ்வொரு சினிமா ரசிகரும் பார்க்க வேண்டிய படம். புரிந்துகொள்பவர்களுக்கு இது ஒரு கவிதை” என்று ‘டிசி’ படத்தை அல்லு அர்ஜுன் புகழ்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டு ‘AA23 மற்றும் LK7’ என்று தற்காலிகமாக அந்தப் படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘டிசி’ படத்தை அல்லு...
1931 முதல் தமிழில் பேசும் படங்கள் வெளியாகத் தொடங்கினாலும் அவை அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைய துவங்கியது 1950களின் துவக்கத்தில் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்விற்கு முன்னெடுப்பாக விளங்கின என்பதும் உண்மை.
சிவாஜி படங்கள் சமூக சீர்திருத்தம் மட்டுமே பேசியது என்பது மேலோட்டமான பார்வை. தமிழின் தொன்மையையும், செழுமையையும்...
ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் 51 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அதை ‘தர்மன்’ படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை தற்போது நடித்து வரும் ‘தர்மன்’ படப்பிடிப்பில், இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் ரஜினி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
அந்தக் கொண்டாட்டம் குறித்த சிறிய வீடியோ க்ளிப் ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது....
சாந்தனு - சீமான் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘ஒரு கைதியின் டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மதுரை பின்னணியில் அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.
சாம் சி எஸ் இசையமைக்கிறார். இப்படத்தை கேஆர்ஜி நிறுவனம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 10 -வது படம் இது.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். “குடும்ப உறவுகளின்...









