Google search engine
பிரபல இசை அமைப்​பாள​ரான இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உரு​வாக்​கிய தனது முதல் சிம்​பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்​சிக்​குச் சிறப்​பான வரவேற்பு கிடைத்​தது. இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை, இளை​ய​ராஜா படைத்தார். இந்​நிலை​யில், சென்​னை​யில் மே 30-ம்...
தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வ​ராக ஜிகேஎம். தமிழ்க்குமரன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​துக்கு 3 ஆண்​டுகளுக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். தற்​போதைய நிர்​வாகி​களின் பதவிக் காலம் ஏப்​ரல் மாதத்​துடன் நிறைவடைகிறது. இதனால், 2026-29-ம் ஆண்​டுக்​கான புதிய நிர்​வாகி​கள் தேர்​தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்​றது. ஒரு தலை​வர், 2 துணைத் தலை​வர்​கள், 2 செய​லா​ளர்கள், ஒரு பொருளாளர் உட்பட 33...
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான படம், ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்பட பலர் நடித்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்ததைஅடுத்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இரண்டாவது முறையாக மீண்டும் வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதை மேற்கோள் காட்டி...
சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே சிம்பு படத்தினை முடித்துவிட்டு, சூர்யா படத்தினை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ரஜினியை சந்தித்து...
கவுதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம், ‘ரூட்’. இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பவ்யா திரிகா, ஒய்.ஜி.மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சூரியபிரதாப் எஸ். எழுதி இயக்கியுள்ளார். வெரஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில், ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம், தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். அரன்...
தமிழில், 180, மாலினி 22 பாளை​யங்​கோட்​டை, காஞ்​சனா 2, ஓ காதல் கண்​மணி, மெர்​சல், திருச்​சிற்​றம்​பலம் உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடப் படங்​களில் நடித்து வருகிறார். ‘திருச்​சிற்​றம்​பலம்’ படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இப்​போது தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறு​வனத்​துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’...
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது....
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’ பட அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அண்டர் 18’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய  கார்த்திக் பெருமாள்சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெற்றிமாறன் வெளியிட்டார். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு...
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது. இதில் இயக்​குநர் ஆர்.கே.செல்வமணி போட்​டி​யின்றி தலை​வ​ராகத் தேர்வு செய்​யப்​பட்​டார். அவர் ஏற்​கெனவே இச்​சங்​கத்​தில் தலை​வ​ராக இருந்​தவர். நடப்பு தலை​வ​ராக இருந்த ஆர்​.​வி.உதயகு​மார் பொதுச் செய​லா​ள​ராக​வும் செய​லா​ள​ராக இருந்த பேரரசு பொருளாள​ராக​வும் துணைத் தலை​வர்​களாக பி.​வாசு, கே.எஸ்​.ரவி​கு​மார்...
‘வை​கை’, ‘தீர்க்​கதரிசி’ படங்​களை இயக்​கிய எல்.ஆர்.சுந்தர​பாண்டி அடுத்து இயக்​கி​யுள்ள படம், ‘4த் ஃப்ளோர்’. ஆரி ஆர்​ஜுனன், தீப்​ஷி​கா, பவித்​ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோ கிரியேஷன் சார்​பில் ஏ. ராஜா தயாரித்​துள்​ளார். ஜே.லக் ஷ்மண் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். தரண்​கு​மார் இசையமைத்​துள்ள இப்​படம் பிப்​.27-ல் வெளி​யாகிறது. இதன் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சேரன், சுசீந்திரன், விஜய் மில்​டன், சுப்​பிரமணி​யம் சிவா, நடிகர்கள்...