Google search engine

குமரி: கடற்கரையில் ஒதுங்கிய சோப் ஆயில் பேரல்

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற லைபிரியா நாட்டுக் கப்பல் கடந்த மே 24ஆம் தேதி கடலில் கவிழ்ந்தது. இதிலிருந்து குமரி மாவட்டத்திலும் கண்டெய்னர் கரை ஒதுங்கியது.   இந்த நிலையில், நேற்று சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் இரவிபுத்தன்துறை கடற்கரைப் பகுதியில்...

அருமனை: சாலையில் சிதறிய வண்டல் மண்ணால் அபாயம்

அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு சென்று விளை நிலத்தில் கொட்டுகின்றனர். ஆனால் சில விளை நிலங்களுக்குள் வாகனம் உள்ளே நுழைய முடியாதபட்சத்தில் சாலையோரம் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்த மண் சிதறி சாலையில் கிடக்கின்றது.  குறிப்பாக மஞ்சாலுமூடு பகுதியில் இருந்து...

கருங்கல்: போக்குவரத்து போலீசாரை நியமிக்க மனு

கருங்கல் காமராஜர் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தற்காலிகப் பேருந்து நிறுத்தம் பேரூராட்சி மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் கருங்கல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு அதனைத் தீர்ப்பதற்காக தினமும்...

குமரி: 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளியை திறக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது இந்த பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை...

குமரி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பக்ரீத் பொருநாள் வாழ்த்து

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னத...

குற்றியாறு:   குடியிருப்பில் நள்ளிரவில் யானைகள் அட்டகாசம்

கோதையாறு அருகிலுள்ள குற்றியாறு பகுதி அரசு ரப்பர் கழக தோட்டங்கள் நிறைந்ததாகும். இந்த பகுதியில் ரப்பர் பால்வடிப்பு தொழிலாளர்களின் குடியிருப்புகள், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளன. சுற்றுலா தலமும் ஆகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு உள்ள குடியிருப்பு அருகில் யானைகள் தென்னைகள் மற்றும்...

தக்கலை:   தலைமை ஆசிரியரிடம் பணம் மோசடி; கணவன் மனைவி கைது

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் அருள் சகாய சேகர் (56). இவர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ததேயுஸ் (54). இவர் தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை அருள் சகாய சேகரின் மகனுக்கு விற்பதாக கூறி...

வாறுத்தட்டு: பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு "நிமிர்" என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்தியுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக களியக்காவிளை அருகே வாறுத்தட்டு பள்ளியில் நிமிர் குழுவின் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது....

குழித்துறை:  இரவில் டாரஸ் லாரி மோதி வாலிபர் சாவு

திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார். இன்று 7-ம் தேதி வெளிநாட்டிற்குச் செல்ல உள்ள நிலையில் நேற்று இரவு தனது இரண்டு சிறுகுழந்தைகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.  குழித்துறை சந்திப்புப் பகுதியில் வைத்து இவரது வாகனத்தின் மீது கனிமவள டாரஸ் லாரி...

குழித்துறை: கழிவு லாரியை திருப்பி அனுப்பிய போலீசார்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் நேற்று குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர்.  பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர்...